இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள்-2, (இராமநாதபுரம், பரமக்குடி); வட்டங்கள்-7 (இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடனை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி); வருவாய் கிராமங்கள் 424.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள் - 2, பேரூராட்சிகள் -9, ஊராட்சி ஒன்றியங்கள் - 11, பஞ்சாயத்துக்கள் - 443. சட்டசபைத் தொகுதிகள்: 5 (திருவாடனை, பரமக்குடி, இராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்). பாராளுமன்றத் தொகுதி: - 1 (இராமநாதபுரம்) கல்வி: பள்ளிகள்: துவக்கநிலை -969; நடுநிலை -142; உயர்நிலை - 57; மேனிலை - 39. கல்லூரிகள்: அரசுக் கலைக் கல்லூரிகள் (இராமநாதபுரம் மற்றும் கமுதி); முகமது சதக் பாலிடெக்னிக், கீழக்கரை; முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை; தஸ்லீன் பீவி அப்துல் காதர் கலைக்கல்லூரி, கீழக்கரை; முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி; மாலைநேரக் கல்லூரி, பரமக்குடி.
வழிபாட்டுத் தலங்கள்:
இராமேஸ்வரம், திருபுல்லாணி பெருமாள் கோவில், உத்திரகோச மங்கை, திருவாடானை, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் கிறித்துவ தேவாலயம், நயினார் கோவில் முதலியன இம்மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
இராமேஸ்வரம் கோயில்
இராமேஸ்வரம் கோயில் |
கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 2 பர்லாங்கு தொலைவும், தெற்கு வடக்காக ஒன்றரை பர்லாங்கு தொலைவும் உடைய மிகப்பெரிய கோவில் இராமேஸ்வரம் கோயில். இங்கு காணவேண்டிய முக்கிய பகுதி சொக்கட்டான் மண்டபம். இராமநாத சுவாமியின் சந்நிதியே மூலஸ்தானம். சீதாதேவி மணலில் பிடித்த லிங்கமான இராமேஸ்வரர் இங்கிருக்கிறது. இதனாலேயே இவ்வூருக்கு இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. இக்கோயில் நந்தி மிகப் பெரியது. இதன் நீளம் 23 அடி, அகலம் 12 அடி, உயரம் 17 1/2 அடி. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இக்கோயிலில் உள்ளது. அது படிகத்தினால் ஆனது. இராமேஸ்வரம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வடநாட்டினரும் வெளிநாட்டினரும் இங்கு அதிகமாக வருகின்றனர்.
மாசி மகம், மாசி சிவராத்திரி, வைகாசி, ஆடி அமாவாசை வசந்த உற்சவம் இவை நான்கும் பெரிய விழாக்களாக இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இங்குப் பயணிகள் தங்குவதற்கு ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. தலைமை அர்ச்சகர், சிருங்கேரி சங்கராச்சாரியார், இராமநாதபுரம் சேதுபதி, நேபாள மன்னர் ஆகிய இந்நால்வருக்கு மட்டுமே இராமநாத சுவாமி கருவறைக்குச் செல்லும் உரிமை உண்டு. காசியாத்திரை செல்பவர்கள் இராமேஸ்வரத்தில் தொடங்கி மீண்டும் இராமேஸ்வரத்துக்கு வந்து முடிப்பார்கள்.
இவ்வழக்கம் தென்னாட்டினரால் மேற் கொள்ளப்படுகிறது. துளசிதாஸ் இராமாயணம், சேதுபுராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் இத்தலத்தைச் சிறப்பிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்றோர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, கோவில், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, கல்லூரி, கோயில், இக்கோயில், கமுதி, முக்கிய, கீழக்கரை, தமிழ்நாட்டுத், தகவல்கள், வருகின்றனர், குடும்பத்தாரும், திகழ்கிறது, சேதுபதி, இக்கோவிலில், பர்லாங்கு, மாசி, | , இராமநாத, இங்கு, தொலைவும், ramanathapuram, நூற்றாண்டில், முகமது, கல்லூரிகள், கடலாடி, திருவாடனை, சதக், வருவாய், முதுகுளத்தூர், districts, வழிபாட்டுத், information, தொடங்கி