இராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்
செந்நிறக் கற்பாறைகள்:
மிகக் குறைந்த அளவே கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் சாலைகள் அமைக்கவும், கட்டிட வேலைகளுக்கும் பயன்படுகின்றன.
பவளச் சுண்ணாம்புக் கல்:
இது இராமேஸ்வரம் தீவில் சில இடங்களில் 50 டன் அளவில் 100 மீட்டர் அகலத்திற்கு கிடைக்கலாம் என்று கருதுகின்றனர். இதை சுண்ணாம்புக் கல்லாக பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் இதை நுரைக்கல் என்றும் சுழி என்றும் அழைக்கிறார்கள்.
கடற்பாறை:
கடலோரத்தில் இப்பாறைகள் உண்டாகத்தக்க வெப்ப நிலையும், தெளிந்த ஆற்று நீருடன் படிவங்கள் சேராத் தன்மைகளும் காணப்படுகின்றன. தீவுகளைச் சுற்றிலும் கூட இத்தகைய பாறைகள் ஏராளமாக இருக்கின்றன.
மண்ணெண்ணெய் ஊற்றுகள்:
தேவிப் பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மண்ணெண்ணெய் ஊற்றுகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மீன்வளம்:
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை நீளம் 160 மைல்களாகும். இது தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்கரையாகும். கரையோர கிராமங்களில் வசிப்போரில் நாற்பது சதவீத மக்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இராமேஸ்வரம் , பாம்பன், உச்சிப்புளி ஆகிய இடங்களில் மீன் கிடங்குகள் உள்ளன. இராமேஸ்வரத்தில் சிறந்த மீன் அங்காடி உள்ளது. வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதியாகின்றன தனிப்பட்ட மீனவர் குழுக்களுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கங் களுக்கும் அரசு இயந்திரப் படகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு வகை மீன்களை சேகரித்து, பாதுகாத்து விற்க பாம்பனில் ஒரு நிலையம் உள்ளது. இங்கிருந்து தனிப்பட்டவர்களுக்கும், மீன் வளர்ப்புக்கு உகந்த குளங்களுக்கும் வழங்கப்படுகின்றன. தொண்டி, மோர்ப்பண்ணை, கீழக்கரை, மண்டபம் ஆகிய இடங்களில் ஐஸ் யந்திர குளிர்ப்பதன அறைகள் நிறுவப்பட்டுள்ளன. மண்டபத்தில் மீன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், பாம்பனில் மீன் மாவு தொழிற்சாலையும் அமைக்கப்பட்டுள்ளன.
பருவக் காலங்களை மீனவர்களுக்கு முன்னறிவிக்க தொண்டி, கீழக்கரை ஆகிய இடங்களில் எச்சரிக்கை நிலையங்களை அரசு அமைத்துள்ளது. கடலில் சிக்கிக் கொள்ளும்மீனவர்களைக் காப்பாற்றி மீட்க நவீன வசதி அடங்கிய படகு தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. கீழக்கரை, தொண்டி ஆகிய இடங்களில் படகு கட்டும் தளங்கள் உள்ளன. மண்டபத்தில் மத்திய கூட்டுறவு மீன்பிடிச் சாதன விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாவலை என்ற இட்டிலி போன்ற உருவமும் மென்மையும் கொண்ட மீனும், கொழுப்புச் சத்து குறைவான எலும்பு நிறைந்த வெள்ளி உயிறு எனப்படும் மீனும் நிறைய கிடைக்கின்றன. ஆவுகரியா என்னும் மீன் இனம் குருசடைத் தீவுக்கருகில் நெடுங்காலமாக அகப்படுகிறது. குறைந்தது 12 அடி நீளமுள்ள இராட்சத சுறாமீன்கள் தனுஷ்கோடியருகே பிடிக்கப்படுகின்றன. இன்னும் பல வகை மீன்களும் கிடைக்கின்றன. மண்டபத்தில் இம்மாவட்ட கடலோரப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களைப் பற்றியும் பிடிபடும் இடங்களையும் ஆராய, மத்திய கடல் மீன் ஆய்வு நிலையம் 1947 இல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் அறிஞர்கள் இங்கு மீன் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையத்தின் கீழ் இயங்கும் சிறு ஆராய்ச்சி நிலையங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா, கொல்லம், காக்கிநாடா, பரங்கிப்பேட்டை, கள்ளிக்கோட்டை, கார்வார், பம்பாய் ஆகிய இடங்களில் இயங்குகின்றன. கடற்பாசியிலிருந்து உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முறைகளையும் இவை நாடெங்கும் பரப்பி வருகின்றன. இம்மாவட்டத்தில் சங்கெடுக்கும் தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுகின்றனர்.
இராமேஸ்வரத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை சங்கு எடுக்கப்படுகிறது. இங்கு நல்ல சாதிச் சங்குகள் கிடைக்கின்றன. பட்டி, இருபிறவி, இராமேஸ்வரம் என்னும் மூன்று வகைச் சங்குகள் கிடைக்கின்றன. இச்சங்குகளுக்குச் சிறந்த சந்தையாக வங்காளம் திகழ்கிறது. தென்வடலையில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையும், பெரியப்பட்டினம், கிழக்கரை ஆகிய பகுதிகளில் செப்டம்பர் முதல் ஜனவரி வரையும் சங்குகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி வரையும் சங்குகள் எடுக்கப்படுகின்றன தேவிப்பட்டினம், திருப்பாலக்குடி, மோரிப்பனை, கரகங்காடு ஆகிய ஊர்களில் வலம்புரிச் சங்குகள் கிடைக்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மீன், ஆகிய, இடங்களில், சங்குகள், இராமநாதபுரம், கிடைக்கின்றன, கீழக்கரை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, மண்டபத்தில், பகுதிகளில், தொண்டி, இராமேஸ்வரம், தகவல்கள், தமிழ்நாட்டுத், ஜனவரி, நிலையம், வரையும், பாம்பனில், படகு, இங்கு, எடுக்கப்படுகின்றன, | , அரசு, என்னும், மீனும், மத்திய, ramanathapuram, கருதுகின்றனர், மக்கள், சுண்ணாம்புக், பாறைகள், districts, information, என்றும், மண்ணெண்ணெய், உள்ளது, மீனவர், சிறந்த, இராமேஸ்வரத்தில், ஊற்றுகள், ஈடுபடுகிறார்கள், கூட்டுறவு