மதுரை - தமிழக மாவட்டங்கள்
வளையல்காரத் தெரு அவர் வளையல் விற்ற திருவிளையாடலால் பெயர்
பெற்றது. அவர் பிட்டு விற்ற இடம் பிட்டுத் தோப்பு. அவர்
குண்டோதரனுக்குச் சோறு இட்ட இடம் அன்னக்குழி மண்டபம்.
பழங்காநத்தம் என்னும் மதுரையின் புறநகர்ப் பகுதி யிலுள்ள இடுகாடு
கோவலன் பொட்டலாகும். இவ்விடத்தில்தான் கோவலன் கொலை
யுண்டதாகக் கூறுவர். மதுரையில் இரவு முழுவதும் கடைகள்
பெரும்பாலும் திறந்திருக் கின்றன. மதுரையிலும் அதன் சுற்றுப்
பகுதிகளிலும் மல்லிகைத் தோட்டங்கள் மிகுதி யாதலால். இங்கிருந்து
தினந்தோறும் மாலையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற
வெளிநாடுகளுக்கு மல்லிகைப் பூக்கள் விமானம் மூலம்
ஏற்றுமதியாகின்றன.
உத்தங்குடி :
ஒத்தகடைக்கும் தல்லாகுளத்திற்கும் இடையே இவ்வூர் உள்ளது. அரசினர் தொழிற் பேட்டை இவ்வூரருகே அமைந்துள்ளது.
வெளவால் தோட்டம் :
ஆனை மலைக்குள் உள்ள வெளவால் போன்ற ஒரு குகைக்கு இப்பெயர் வழங்குகிறது.
ஆண்டார் கொட்டாரம் :
பாண்டியர்களின் அரண்மனைகள் இருந்த இடம். வரிச்சியூர்ச் சாலையில் தல்லாக்குளம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.
தாமரைப் பட்டி :
இக்கிராமத்து கண்மாயில் தாமரை மலர்ந்திருப்பதால் தாமரைப்பட்டி என்னும் பெயர் கொண்டது. சிட்டம்பட்டி இவ்வூராட்சிக்கு உட்பட்டது. சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தம் பட்டி என்றாகி, பிறகு சிட்டம்பட்டி என்று மருவிற்று.
திருமோகூர் :
இவ்வூர் மதுரையிலிருந்து 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்களும் அசுரர்களும் சமுத்திரைத்தைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தனர். அமிர்தம் நிரம்பிய பானையை அசுரர்களை ஏமாற்றி எடுத்துச் செல்வதற்காக விஷ்ணு அழகிய மோகினிப் பெண்ணாக மாறிய தலம் இது. திருமோகூரின் புராணப் பெயர் மோகனக் ஷேத்திரம் என்பதாகும். இவ்வூர் திருவாதவூர்ச் சாலையில் ஒத்தக் கடையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்ற தலம். வள்ளல் பழையன் என்ற குறுநில மன்னன் வாழ்ந்த ஊர். இவ்வூர் ஒரு போர்க்களமாக விளங்கி யதாக இலக்கியங்களால் அறிய முடிகிறது. இதைத் தென்புறம்பு நாட்டு மோகூர் எனவும் குறிப்பிடுவர். இது ஒரு சுற்றுலாத்தலமாகும்.
நரசிங்கம் :
கி.பி.8,9-ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புடன் விளங்கிய இவ்வூர், ஆனைமலையின் மேற்குக் கோடியில் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இரணியமுட்டம் என்பது இதன் பழைய பெயர். மலைபடுகடாம் என்ற சங்ககால நூலின் ஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் இவ்வூரினராவார். இவ்வூரிலுள்ள நரசிம்மர் கோவில் புகழ்பெற்றதாகும். தெற்கில், ஒரு தனிப்ாறையின் முகப்பில் 16 மீட்டர் உயரத்தில் வரிசையாக சமணத் துறவிகளின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் உள்ளன.
ஆனைமலை |
மதுரை மாநகருக்குக் கிழக்கே 10கி.மீ. தொலைவில் ஒரு ஆனை படுத்திருப்பது போன்று தோற்றம் பெற்று அமைந்துள்ளது. இது சமணத் துறவிகளின் இருப்பிடமாய் விளங்கியதாய் இலக்கியங்கள் கூறுகின்றன. இம்மலைக்கருகே வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், மதுரை, பெயர், உள்ளது, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இடம், அவர், தகவல்கள், அமைந்துள்ளது, தமிழ்நாட்டுத், தொலைவில், சிட்டம்பட்டி, 10கி, சமணத், | , ஆனைமலை, துறவிகளின், பட்டி, தலம், கோவலன், information, districts, madurai, விற்ற, என்னும், வெளவால், போன்ற, சாலையில்