மதுரை - தமிழக மாவட்டங்கள்
மதுரைக்குப் பெருமை சேர்த்த நாயக்க மன்னர்களுள் திருமலை நாயக்கர்
தலைசிறந்தவராவார். அவர் திருமலைநாயக்கர் மகால் ஆயிரங்கால்
மண்டபம் ஆகியவற்றைக் கட்டியதோடு அழகர்கோயில், திருபரங்குன்றம்
கோயில் ஆகியவற்றிற்குத் திருப்பணி செய்தார். நாயக்கர் மரபில்
வந்த பேரரசி ராணி மங்கம்மாள் தமுக்கம் என்ற பெயரில் ஒரு
மாளிகையைக் கட்டினாள். 1786இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மதுரைச் சீமை சென்னை மகாணத்தில் ஆங்கிலேய கவர்னர் ஆட்சிக்கு
1801-இல் கொண்டுவரப்பட்டது. இந்திய விடுதலைப் போரின்
பின்னணியில் மதுரை சிறப்பிடத்தை வகித்தது. 1947-இல் இந்தியா
சுதந்திரம் பெற்றதும், மதுரை மாவட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான
ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
எல்லைகள் :
மதுரை மாவட்டத்திற்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகர் மதுரை ஆகும்.
வழிப்பாட்டுத் தலங்கள் :
மீனாட்சியம்மன் - சுந்தரரேஸ்வரர் கோவில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், மதுரை மாரியம்மன் கோவில் முதலியன மதுரை மாவட்டத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களாகும்.
மீனாட்சி அம்மன் கோவில் :
மீனாட்சி அம்மன் கோவில் |
கீழ்க் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்திற்குக் கோடு கிழித்தாற் போன்று சரியாகச் சிவலிங்கப் பெருமான் வழியாகப்போகிறது. வடக்கு தெற்குக் கோபுரங்களும் சுந்தரேசர் திருக்கோயிலை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். தமிழ்நாட்டுச் சிற்பிகளின் திறனுக்கோர் எடுத்துக்காட்டாய் இதைக் கொள்ளலாம். முக்குறுணி விநாயகர் உருவம் மாபெரும் வடிவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சந்நிதிக்குள் நுழையும் வாயிற்கதவுகள், முக்குறுணி பிள்ளையாருக்கு அருகேயுள்ள கதவுகள், தெற்குக் கோபுரத்திற்குக் கீழேயுள்ள கற்தூண்கள் ஆகியவற்றில் கண்கவர் நடனக் கலைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
புராணக்கதைகளை விளக்கும் பல கதைச் சிற்பங்கள் கிழக்கு மேற்குக் கோபுரங்களில் காணப்படுகின்றன. மண்டபத்தூண் ஒன்றில் யானைத் தலை, பெண் உடல், புலிக்கால் ஆகியவற்றைக் கொண்டச் சிற்பம் காணத்தக்கது. திருமணமண்டபம். கம்பத்தடி மண்டபம் ஆகியவை கலையழகுடன் அமைந்துள்ளன.
கோயிலின் பல பகுதிகளிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பேணி வைக்கப் பட்டுள்ள பழங்காலத்து நாணயங்களையும் பார்வையிடலாம். சங்க காலத்துப் புலவர் களின் திருவுருவங்கள் உள்ளன. திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலியன பொறிக் கப்பட்டிருப்பதையும் காணலாம். தலவிருட்சமாக விளங்கும் கடம்ப மரத்தின் எஞ்சிய பகுதி வெள்ளித் தகடால் போர்த்தப்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டிற்குப் பயன்படும் மலர்ச்செடிகள், குளத்திற்குள் வைக்கப்பட்டிற்கும் பொற்றாமரை முதலியன பார்க்கத் தக்கவை. காலங்காலமாகக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மாறுதல்களை இந்தக் கோவிலிலே கண்டறியலாம்.
அவ்வவ் காலத்து ஆடைகளையும் அணிகலன்களையும் பழக்க வழக்கங்களையும் கூட இக்கோயில்தூண் சிற்பங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பக்தர்களுக்கும், புராண ஈடுபாடு உடையவர்களுக்கும், திருவிளையாடற் புராண கதைகளை அறிய விழைபர்களுக்கும் இக்கோயில் ஒப்பற்ற கருவூலமாகத் திகழ்கிறது. மொட்டைக் கோபுரத்தின் அடியில் உள்ள தூண்கள் இசை எழுப்புகின்றன. பலவகை உயிரினங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ள திறனையும், இவற்றை வாகனங்களாக உருவாக்கியுள்ளதையும் கண்டு மகிழலாம்.
மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் அஸ்த சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் மதுரை இளவரசி மீனாட்சியின் கதையையும், சிவனின் அவதாரமாகிய சுந்தரேஸ்வரருடையத் திருமணத்தைப் பற்றியும் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் இருக்கும் இடத்தில் தான் பழைய தமிழ் இலக்கிய கழகமான சங்கத்தின் இலக்கியச் சந்திப்பும், பரிசளிப்பும் நடந்தேறியது. இக்குளத்தில் மூழ்கிய பிரதிகள் தவிர்க்கப்பட்டன. மிதந்த பிரதிகள் மாபெரும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, கோவில், மீனாட்சி, அம்மன், மாவட்டங்கள், மாவட்டமும், தமிழக, tamilnadu, புராண, சிற்பங்கள், மண்டபம், முதலியன, தமிழ்நாட்டுத், தகவல்கள், அமைந்துள்ளன, காணப்படுகின்றன, madurai, மாபெரும், கோயிலின், | , தூண்கள், பொற்றாமரை, பட்டுள்ள, முக்குறுணி, பிரதிகள், கோபுரத்திற்குக், இந்தியா, வழிப்பாட்டுத், நாயக்கர், மாவட்டம், information, போன்று, ஆகியவற்றைக், கோபுரத்தின், districts, தெற்குக்