மதுரை - தமிழக மாவட்டங்கள்
கோச்சடை :
மதுரையிலிருந்து மேலக்கால் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை மாநகருக்குத் தேவைப்படும் குடிநீர் இங்குதான் தேக்கி வைக்கப்படுகிறது. பென்னர் போல்ட் தொழிற்சாலையும், நெல் அரைவை ஆலைகளும் இவ்வூரில் உள்ளன. இங்கு எப்பகுதியில் தோண்டினாலும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆற்றுமணல் கிடைக்கிறது.
அவனியாபுரம் :
மதுரைக்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய புல் பண்ணை ஒன்றை நகராண்மைக் கழகத்தார் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையம் இவ்வூரருகே அமைக்கப்பட்டுள்ளது. எருமை மாடுகள் மிகுதி. வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. கலப்பு உரத் தொழிற்சாலையும், கைத்தறி ஆலைகளும் உள்ளன.
விரகனுர் :
கத்தரிக்காய் இங்கு ஏராளமாய் விளைகின்றது.
மேலக்குயில் பட்டி :
இங்கு சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன.
கரடிப்பட்டி :
மதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ளது. குகையும் வட்டெழுத்துக் கல்வெட்டும், சமணர் உருவமும் உள்ளன.
பொன்மேனி :
இங்கு டி.வி.எஸ். சிங்கர் தையல் இயந்திர ஊசித் தொழிற்சாலை இயங்குகிறது.
சாம்பல் நத்தம் :
ஞான சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த அனல் பறக்கும் வாதத்தில் சமணர் களுடைய ஏடு தீயில் எரிந்து சாம்பலான இடமே சாம்பல் நத்தம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. மதுரைக்குத் தெற்கே நெடுங்குளம் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் சமானத்தம் என்றும் வழங்கப்படுகிறது.
புல்லுத்து :
இயற்கைக் காட்சி நிறைந்த பகுதியாதலால், சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த இடம். இவ்வூரில் கோழிப்பண்ணை நடைபெறுகிறது. இது கவரிமான்-சோழவந்தான் சாலையில் இருக்கிறது.
சிலைமான் :
இவ்வூரின் ஒரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும் இருக்கிறது. மதுரை-மானாமதுரைச் சாலையிலுள்ள இவ்வூர் வைகைக் கரையில் அமைந்து தென்னை மரங்கள் மிகுந்துள்ளது. சிமெண்டு குழாய்த் தொழில், ஓடு செய்யும் தொழில், நூலாலை முதலியவற்றால் சிறப்புற்று விளங்குகிறது.
தோப்பூர் :
இவ்வூரினைச் சேர்ந்த ஆஸ்டின்பட்டியில் காசநோய் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு நூலாலைகளுக்குத் தேவைப்படும் பாபின்கள் செய்யப்படுகின்றன.
பாரபத்தி :
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. மீனாட்சி சொக்கலிங்க ஆலயம் இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கிறது. அருகிலுள்ள புதுக் குளத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. திருப்பரங்குன்றத்து முருகனை திருவிழாக் காலத்தில் இங்கு எடுத்து வருகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, இங்கு, தொலைவில், தமிழக, மாவட்டங்கள், உள்ளது, tamilnadu, சாலையில், தமிழ்நாட்டுத், மதுரையிலிருந்து, சமணர், தகவல்கள், | , நத்தம், இவ்வூர், பகுதி, மாவட்டத்திலும், சாம்பல், தொழில், இராமநாதபுரம், இருக்கிறது, இவ்வூரில், தேவைப்படும், information, districts, madurai, தொழிற்சாலையும், ஆலைகளும், நடைபெறுகிறது, தெற்கே, மதுரைக்குத், இயங்குகிறது