மதுரை - தமிழக மாவட்டங்கள்
சுந்தர பாண்டியன் கோயில் :
மருதூரில் உள்ள இக்கோயிலை உள்ளுர் மக்கள் கிருஷ்ணன் கோயில் என்கின்றனர். இக்கோயில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட வைணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் முகமண்டபத்தின் புறச்சுவர்களில் பாண்டியர், சோழர் கல் வெட்டுகள் காணப்படுகின்றன.
திருச்சுனைச் சிவன் கோயில் :
இக்கோயில் கருங்காலங்குடி என்னும் ஊரில் குன்றின் மீது பொலிவுடன் அமைந்துள்ளது. பாண்டியரால் கட்டப்பட்ட இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவுப்படுத்தப் பெற்றுச் சிறப்படைந்தது.
பள்ளிவாசல்களும், தர்க்கார்களும் :
மதுரை நகரில் காஜியார் தெரு பள்ளிவாசல், முனிச்சாலைப் பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல், கட்ராப் பாளையம் தெரு பள்ளிவாசல், யானைக்கல் அருகிலுள்ள சங்கம் பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல் ஆகிய முக்கிய பள்ளிவாசல்கள் இருக்கின்றன. கி.பி. 1759 முதல் 1764 வரை மதுரையை ஆட்சி செய்த கான் சாகிப்பின் சமாதி மீது எழுப்பட்டுள்ள தர்கா அரசரடி சம்மட்டிப்புரத்தில் உள்ளது.
மதுரை தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் தர்காவும், மேற்குவாசல் சின்னக்கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் தர்காவும் உள்ளன. கோரிப்பளையம் தர்கா மிகப் பழைமையானது. இங்கு மதுரையை ஆட்சி செய்த சுல்தான்கள் என்று கருதப்படும் சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா. சையத்சுல்தான் சம்சுதீன் அவுலியா என்ற இருவரின் சமாதி உள்ளது. இத்தர்காவில் காணப்படும் பல அம்சங்கள் இந்துகோயில் கலைச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. தர்காவின் மீது ஒற்றைக் கல்லாலான மேற் கூரை அமைக்கப்பட்டுள்ளது சிறந்த தொழில் நுட்ப சாதனையாகும்.
கிறிஸ்துவ ஆலயங்கள் :
புனித மரியன்னை தேவாலயம் கார்னியர் என்னும் பாதிரியாரால் 1842-இல் கட்டப்பட்டு, டிரிங்கால் பாதிரியார் காலத்தில் விரிவுப் படுத்தப்பட்டது. இது திருமலை மன்னர் அரண்மனைக்கருகில் உள்ளது. கோபுரங்களின் உயரம் சுமார் 45 மீட்டர். அழகிய வளைவுகளைக் கொண்டு, கவினுறக் காணப்படும் இப்பேராலயம் ஐரோப்பியக் கட்டிடக் கலை நுணுக்கங்களால் சிறப்புகிறது. மதுரையில் இதுவே கத்தோலிக்கரின் மிகப் பெரிய ஆலயமாக உள்ளது.
தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள லூர்து அன்னை ஆலயம், மதுரை இரயில்வே காலனியில் உள்ள திரு இருதய ஆலயம், மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கி.பி.1800-இல் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் ஆலயம், மதுரை பொன்னகரத்தில் 1920-இல் கட்டப்பட்ட வெப்நினைவாலயம், மதுரை கோரிப்பாளையம் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் அமெரிக்க மிஷனரியால் கட்டப்பெற்ற ஆலயம் முதலியன முக்கிய கிருத்துவ ஆலயங்கள் ஆகும்.
சுற்றுலாத் தலங்கள் :
மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில், பழமுதிர் சோலை (இவைபற்றி காண்க: வழிட்டுத் தலங்கள்) திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் முதலியன இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாகும்.
திருமலைநாயக்கர் மகால் :
திருமலைநாயக்கர் மகால் |
திருமலை நாயக்கர் அரண்மனையான மகால் மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. கி.பி.1523-இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்றிருப்பதை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்தது. நாயக்கர்களின் கட்டிடக் கலையை நன்கு அறிவதற்கு இந்த அரண்மனை சிறந்த சான்றாக இருக்கிறது. இப்போது பார்வையாளர் கூடமாக இருக்கும் ஸ்வர்க விசாலம் இந்த அரண்மனையில் பெரிதும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இங்குள்ள எந்த ஆதார பீடமும் இல்லாமல் 20 மீட்டர் உயரத்தில் கட்டப் பட்டுள்ள குவிந்த கூரை அமைப்பு நாயக்கர் கால பொறியியல் திறனுக்கு வியத்தகு சான்றாக இருக்கிறது. எல்லா நாட்களிலும் திருமலை நாயக்கரின் வாழ்க்கை வரலாறும், சிலப்பதிகாரமும் ஒலி-ஒளி காட்சிகளால் காட்டப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, ஆலயம், திருமலை, மகால், பள்ளிவாசல், உள்ளது, கட்டப்பட்ட, இக்கோயில், நாயக்கர், உள்ள, கோயில், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, அம்மன், புனித, முக்கிய, மீனாட்சி, அன்னை, மீது, தமிழ்நாட்டுத், முதலியன, தகவல்கள், மீட்டர், இருக்கிறது, ஆலயங்கள், | , மன்னர், கட்டிடக், தலங்கள், சிறந்த, திருமலைநாயக்கர், அரண்மனை, சான்றாக, தர்கா, என்னும், நாயக்க, நகரில், தெரு, பாண்டியர், மக்கள், madurai, districts, information, அருகிலுள்ள, மதுரையை, மிகப், அவுலியா, காணப்படும், தர்காவும், வீதியில், ஆட்சி, செய்த, சமாதி, கூரை