மதுரை - தமிழக மாவட்டங்கள்
தொழில் வளம் :
மதுரை கோட்ஸ் ஆலை :
கோவைக்கு அடுத்தபடியாக மதுரையை ஆலைகளின் நகரம் எனலாம். இதில் முதன்மை யாகத் திகழ்வது மதுரை கோட்ஸ் ஆலை. ஆண்ட்ரூ ஹார்வி, புராங்க் ஹார்வி சகோ தரர்கள் 1893 இல் மதுரையில் ஓர் ஆலையை அமைத்தனர். இதனால் இதை ஹார்வி ஆலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆலையில் 5,00,000 க்கும் மேற்பட்ட கதிர்களும், சில ஆயிரம் இயந்திரத்தறிகளும் உள்ளன. 80ஆம் எண் நூல்களும் தயாராகிறது. இந்த நூல்கள் மதுரைநூல், ஹார்வி நூல் என்னும் பெயர்களைத் தாங்கி அமோக விற்பனையாகின்றன. கண்ணைக்கவரும் வண்ணத் துணிகளையும், பருத்தி, டெரிலின், டெரிகாட்டன் வகைத் துணிகளையும் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆலையில் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆலைக்கு சற்றுத் தொலை வில் ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்புகள் இருக்கும் ஹார்வி நகர் உள்ளது.
மீனாட்சி ஆலை :
இது 1921 இல் பரவையில் தியாகராகச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை இந்தியாவிலேயே புதுமையானதும், உற்பத்தித் திறம் மிக்கது என்றும் புகழ்பெற்றதாகும். இங்கு உற்பத்தியாகும் நூல்களும், துணிகளும் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றன.
சீதாலட்சுமி ஆலை :
இதை ஆலைத் தொழிலில் சிறந்த அனுபவம் உடையவரான சி.எஸ். இராமாச்சாரி தோற்றுவித்தார். மதுரை மாநகரில் அமைந்துள்ள இவ்வாலையில் செயற்கை நார்ப்பட்டு நூல் தயாராகிறது.
மற்ற ஆலைகள் :
பாண்டியன் ஆலை, பாலகிருஷ்ணா ஆலை, ராஜா ஆலை, ஜஂ விசாலட்சி ஆலை, ஜஂ கோதண்டராமா ஆலை (நெசவு) ஸ்ரீ கோதண்டராமா ஆலை (நூல்), இராஜேஸ்வரி ஆலை, கூட்டுறவு நூல் ஆலை ஆகிய ஆலைகள் மதுரையிலும், பசுமலையில் மகாலட்சுமி ஆலையும் உள்ளன.
கழிவுப் பஞ்சாலைகள் :
குறைந்த எண்களில் தயாராகும் நூலை கழிவுப் பஞ்சுகளைக் கொண்டு தயாரிக் கின்றனர். இதைக் கொண்டு சமக்காளம், மாட்டுக்கயிறு போன்றவற்றைத் தாயாரிக் கின்றனர். இத்தொழில் பெருகி, கழிவுப் பஞ்சாலைகள் பல தோன்றியுள்ளன.
மின் ரசாயனத் தொழிற்சாலை :
இது மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில் பெயிண்ட் தயாரிக்க உதவும் ஒரு வகைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இத்தூள் இந்தியாவின் பல இடங்களில் உள்ள பெயிண்டு கம்பெனிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
தொழிற்பேட்டைகள் :
தமிழக அரசு மதுரையிலும், கப்பலூரிலும் இரு தொழிற்பேட்டைகளை கட்டியுள்ளது. மதுரைத் தொழிற்பேட்டையில் பஞ்சாலைகளுக்கு வேண்டிய கீயர், புல்லி, ஷாப்டு, புஷ், ஆர்போர் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. பாண்டியன் கெமிக்கல்ஸ் நிறுவனம் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இதைத் தமிழக அரசும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. சிறுதொழில் வளர்ச்சிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அச்சுத்தொழில் :
பொதுவாக அச்சுத்தொழிலும், சிறப்பாக வண்ண அச்சுத் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பெய்தி உள்ளன. இவைகளில் டி நோபிளி அச்சகமும், கூட்டுறவு அச்சகமும் சிறந்த பணியாற்றுகின்றன.
பிற தொழில்கள் :
கதர் உற்பத்தி, வெல்லம் காய்ச்சுதல், கருப்பட்டி உற்பத்தி ஆகியன நன்கு நடை பெறுகின்றன. பனங்கற்கண்டு உற்பத்தி கோழியூரிலும், பாகநத்தத்திலும் சிறு தொழில் களாக நடைபெறுகின்றன. திருமங்கலத்திற்கு அருகில் மறவங்குளத்தில் மேற்கு ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் மெட்டல் பவுடர் கம்பெனி அலுமினியத்தூள் தயாரிக்கிறது. இது பட்டாசுத் தயாரிப்புக்கும், பெயிண்டு தயாரிப்புக்கும் பயன்படும். மேலும் வெண்கலத்தூள், மக்னீசியம்தூள் ஆகியனவும் தயாராகின்றன. மேலூர் வட்டத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சிமெண்டு ஆலை அமைக்க வாய்ப்புள்ளது.
ஆலைகளைத் தவிர, வேறு பெரிய தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் இல்லாதது ஒரு பெருங்குறை. பொருள் வசதி உள்ளவர்களும், தொழில் அறிஞர்களும் ஒருங் கிணைந்து முன்வந்தால், பெருந்தொழில்களையும், சிறுதொழில்கள் மற்றும் கைவினைத் தொழில்களையும் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழிற்வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை அளிக்கும் சலுகைகளையும் கடனுதவிகளையும் பெற்று தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.றலாம்.தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, தமிழக, தொழில், ஹார்வி, நூல், மாவட்டங்கள், உற்பத்தி, tamilnadu, சிறுதொழில், கழிவுப், கொண்டு, தமிழ்நாட்டுத், தகவல்கள், அச்சகமும், தயாரிப்புக்கும், பெயிண்டு, கின்றனர், தமிழ்நாடு, இம்மாவட்டத்தில், நிறுவி, பங்கு, பெறலாம், | , வளர்ச்சியுறுவதில், மென்மேலும், நிறுவனங்களை, பஞ்சாலைகள், இம்மாவட்டம், கழகம், ஆலைகள், ஆலையில், மேற்பட்ட, நூல்களும், கோட்ஸ், information, madurai, districts, தயாராகிறது, துணிகளையும், பாண்டியன், கோதண்டராமா, கூட்டுறவு, சிறந்த, பெற்று, தொழிலாளர்கள், ஆலைத், மதுரையிலும்