மதுரை - தமிழக மாவட்டங்கள்
நுனியில் இரும்புக்கொழு பதித்த மரக்கலப்பை, முழுக்க
இரும்பினாலான கலப்பை, இருபக்கம் உழுகிற மாதிரியான ராக்கெட்
கலப்பைகள், தொலி புரட்டிகள் போன்ற பல கருவிகள் இவர்களது
தனிச்சிறப்புகள். டீலக்ஸ், மாஸ்டர், வேண்ட் என்று மூன்று
அளவுகளில் கலப்பைகளைத் தயாரிக்கிறார்கள். விதவிதமான பதினாறு வகை
வடிவங் களில் கலப்பைக் கொழுக்கள் தயாராகின்றன. மேலூரிலிருந்து
தமிழ்நாடு முழுக்க மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம்,
ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங் களுக்கும்
வினியோகமாகின்றன. சர்வசாதரணமாக பல தொழிற்சாலைகளில் அதிகம்
உருவாவது இருப்புக் கொழுதான்.
சிலத்தொழிற்சாலைகளில் தினமும் 2400 கொழுக்கள் வரை தயாராகின்றன. இந்தக் கொழுவின் உற்பத்தி மட்டும் வருஷத்திற்கு மூன்று கோடி ரூபாய். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ நான்கு கோடி ரூபாயிற்கும் மேல் விவசாய கருவிகள் இச்சிறு ஊரான மேலூரில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் விநியோகமாவது ஓர் ஆச்சர்யம்.
இதைப்போல் மேலூரில் கிணற்று உருளைகள் தயாரிக்கும் எட்டுத் தொழிற்சாலைகள் உள்ளன. உருளைகள் இங்கு தயாராகி கர்நாடகம், கோவா, ஆந்திரம் என்று பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உருளைகள் இங்கு மட்டும் உருவாவது ஒரு விசேஷம். இது மாதிரியே தோசைக்கல் உற்பத்தி யாவதும் மேலூரில்தான். ஒன்பது அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரையிலான அளவுகளில் தோசைக்கற்கள் உருவாகின்றன. மேலூர் தோசைக் கல்லுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளத்திற்கும் அனுப்பப்படுகின்றன.
மதுரை சுங்கடிப் புடவைகள் :
இந்தியா முழுவதும் பிரபலமான விலைமலிவான சுங்கடிப்புடவைகள் அதிகம் தயாராவது மதுரையில்தான். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் செளராஷ்டிர சமூகத்தினர். மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள சந்துக்களில் அநேக சுங்கடிப் புடவைத் தயாரிப்புக் கம்பெனிகள் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவர்கள் சுங்கடிபுடவை நெசவுத் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆறு கெஜம் உள்ள வெள்ளைத் துணியில் பென்சிலால் டிசைன் போடப்படுகிறது. பிறகு உடம்புக்கு ஒரு கலரும், பார்டருக்கு ஒரு கலரும் போட்டு காய வைத்து, முடிச்சுகளை அவிழ்த்தால் அந்த இடத்தில் சாயம் படாமல் வட்டங்கள் நிறைந்து போகின்றன. இப்படி ஒரு சேலையில் மட்டும் ஐந்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை முடிச்சுகள். அதற் கேற்றபடி வட்டங்கள். பிறகு விரித்தால் இரண்டு வண்ணங்கள் இறைத்த மாதிரியான சின்ன வட்டங்களுடன் சுங்கடிப் புடவை தயார். இதற்கு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை உட்கார்ந்து நுணுக்கமாக முடிச்சுப் போடுகிறார்கள் செளராஷ்டிரப் பெண்கள். இந்தச் சுங்கடிப் புடவைகள் ஆந்திரம், பெங்களூர், பம்பாய் என்று பல பகுதிகளுக்கும் போகின்றன.
தமிழக அரசு சுங்கடிப் புடவைத் தயாரிப்பை குடிசைத் தொழிலாக 1955 இலேயே அங்கீகரித்து விற்பனை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. சுங்கடிப் புடவைகள் வேக்ஸ் பிரிண்டிங் முறையிலும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையிலும் தற்போது பல பாணிகளில் தயாரிக்கப்படுகின்றன.
மதுரை மல்லிகை |
மல்லிகை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக விளைகிறது. மதுரை தெற்குத்தாலுகா, வடக்குத் தாலுகாவிலும், விருதுநகர் மாவட்டத்தில் கரியாபட்டி, சேவல்பட்டியிலிருந்து மதுரை விமானநிலையம் வரையிலுமுள்ள பகுதிகளிலும் மல்லிகை பயிரிடுவது முக்கியமான பயிர்த்தொழிலாகும். மதுரையைச் சுற்றி மல்லிகை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிராகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மதுரையைச் சுற்றிலும் மல்லிகை சாகுபடி நடக்கிறது. மதுரையில் மல்லிகைப்பூ வியாபாரத்திற்கென்று தனி மார்க்கெட் உள்ளது. இது தமிழ்நாட்டில் மற்ற பூ மார்க்கெட்டுகளை விட மிகப் பொரியதாகும்.
இங்கிருந்து சென்னை, ராமநாதபுரம், காரைக்குடி தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி என்று தமிழகத்தின் பல பகுதி களுக்கும், கேரளத்தின் பல பகுதிகளுக்கும், பம்பாய், பெங்களூர் மார்க்கெட்டிற்கும் மல்லிகைப்பூ போகிறது. இது தவிர விமானம் மூலம் மலேசியா, சிங்கப்பூர், லண்டன், மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மதுரை மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மல்லிகை வியாபாரம் நடக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, மல்லிகை, சுங்கடிப், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், ஆந்திரம், புடவைகள், மதுரையைச், மட்டும், இந்தியா, பகுதிகளுக்கும், தமிழ்நாட்டுத், உருளைகள், தகவல்கள், புடவைத், சுற்றியுள்ள, நாயக்கர், பிறகு, திருமலை, பெங்களூர், முறையிலும், நடக்கிறது, மல்லிகைப்பூ, | , பிரிண்டிங், பம்பாய், வட்டங்கள், போகின்றன, நாளொன்றுக்கு, கலரும், நான்கு, போன்ற, கருவிகள், மூன்று, அளவுகளில், மாதிரியான, முழுக்க, madurai, districts, information, கொழுக்கள், தயாராகின்றன, கோடி, மேலூரில், முழுவதும், இங்கு, உற்பத்தி, உருவாவது, கர்நாடகம், களுக்கும், அதிகம், அனுப்பப்படுகின்றன