மதுரை - தமிழக மாவட்டங்கள்
திருமங்கலம் :
சிறுநகரம். குண்டாற்றின் வடகரையிலும், மதுரைக்குத் தென்மேற்கிலும் அமைந்தது. மதுரை விருது நகர் இரயில் பாதையில் முக்கிய ஊராய்த் திகழ்கிறது. அரசு அலுவல கங்கள், கோவில்கள், பள்ளிகள் முதலியவற்றால் இவ்வூர் சிறப்புற்றிருக்கிறது.
கப்பலூர் :
மதுரையிலிருந்து 15கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 1960 இல் தியாகராசர் நூல் ஆலைத் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏராளமான தொழிலகங்கள் ஏற்பட்டு இப்போது கப்பலூர் மதுரையின் விரிவாகக் காணப்படுகின்றது. தொழிற்பேட்டை அமைந்துள்ளது. பூக்கள் அதிகமாக இங்கு விளைவிக்கப்படுகின்றன. சற்று மேடான பகுதியில் அமைந்துள்ள இவ்வூரைப் பார்த்தால் கப்பலின் மேல்தளம் போல் தோன்றும்.
கரடிக்கல் :
சோழவந்தான் சாலையில் 8கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றின் மீது கருப்பண்ணசாமி கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. குன்றின் உயரம் 150 அடி. கொய்யாத் தோட்டங்கள் மிகுந்த ஊர்.
செக்கானுரணி :
மதுரை இரயில் சந்திப்பிலிருந்து இவ்வூர் இரயில் நிலையம் 17கி.மீ. தொலைவில் உள்ளது. சனிக்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. மருத்துவமனை உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்காக இந்த ஊரில் மிகுதியாக இலுப்பைத் தேர்ப்புகள் பராமரிக்கப்பட்டன.
பல்கலை நகர் நகரியம் :
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கட்டிடங்கள் அமைந்த இப்பகுதிக்கு பல்கலை நகர் நகரியம் எனப் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. 1939 முதல் இது நகரியமாக இருக்கிறது.
வடக்கப்பட்டி :
ரெட்டியார்கள் அதிகமாக வாழும் ஊர். இவர்களில் பெரும்பாலோர் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் என்னும் பொதுப்பெயரில் தமிழகம், புதுச்சேரி ஆந்திர மாநிலங்களில் புலால் உணவு விடுதிகளை நடத்தி புகழ் பெற்று விளங்குகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊரில் கூடி முனியாண்டி சுவாமிக்கு விழா எடுக்கின்றனர்.
கல்லுப்பட்டி :
மதுரையிலிருந்து 39கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சிறு நகரத்தின் முழுப்பெயர் தேவங்குறிச்சிக் கல்லுப்பட்டி. காந்தி நிகேதன் ஆசிரமத்தால் இவ்வூர் புகழ் பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவுக்கும், செப்புப் பாத்திரங்கள், மண்பானை மற்றும் கதர்
உற்பத்திக்கும் பெயர் பெற்றது. செவ்வாய்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. மலை மீது அக்னீஸ்வரர் கோவிலும், சுப்ரமணியர் சுனையும் உள்ளன. மூன்றாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் திருவிழாவுக்கு எட்டு ஊர்த்தேர்கள் வந்து சேர்கின்றன. வேளாண்மையில் பின்தங்கியுள்ளது.
சிலைமலைப்பட்டி :
பித்தளைப் பாத்திரங்கள், மண்பானைகள் கூட்டுறவு அடிப்படையில் தயாரிக்கப் படுகின்றன. வெண்கல விளக்குகள் செய்யும் கலையைத் தெரிந்தவர்கள் பலருள்ளனர். வைகாசியில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
பேரையூர் :
பெயரே ஊர் என்பது பேரையூர் என மாறி வழங்குகிறது. இவ்வூர் சர்ப்டூர் சாலையில் கல்லுப்பட்டியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. செப்புக்குடங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. செங்கல், சுண்ணாம்புக் காளவாய்களும், கத்திரிக்காய் வேளாண்மையும் இப்பகுதியில் ஏராளம். சந்தன வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, உள்ளது, தொலைவில், இவ்வூர், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இரயில், கோவிலும், தமிழ்நாட்டுத், இங்கு, தகவல்கள், நகர், முறை, புகழ், நகரியம், பெயர், பெற்று, பாத்திரங்கள், பேரையூர், | , நடைபெறுகிறது, பல்கலை, விளங்குகிறது, கல்லுப்பட்டி, சாலையில், கப்பலூர், information, districts, madurai, மதுரையிலிருந்து, அதிகமாக, கூடுகிறது, சந்தை, மீது, குன்றின், ஊரில்