இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 9
81. இதன் வகைகள் யாவை?
1. பரும மின்னேற்ற அடர்த்தி - அலகு கூலும்.
2. மேற்பரப்பு மின்னேற்ற அடர்த்தி அலகு கூலும்.
3. நீள் மின்னேற்பு அடர்த்தி - அலகு கூலும்.
82. மின்னேற்றம் செய்தல் என்றால் என்ன?
இழந்த மின்னாற்றலை ஒரு மின்கல அடுக்கிற்கு வழங்கல்.
83. மின்னிறக்கம் என்றால் என்ன?
1. ஒரு சுமை வழியாக மின்னோட்டத்தை ஒடச் செய்து
ஒரு மின்கலத்திலிருந்து ஆற்றலைப் பிரித்தல். 2. ஒரு மின்தேக்கியில் அதன் முனைகளில் சுழிஅளவுக்கு மின்னழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். 3.அயனிவயமாதல் காரணமாக வளி அல்லது காற்றுவழியாக மின்னேற்றம் ஒடுதல்.
84. மின்புலம் என்றால் என்ன?
மின்னேற்றம் நுகரும் விசையுள்ள பகுதி.
85. மின்பாயம் என்றால் என்ன?
காந்தப்புலத்தில் மின்பாய அடர்த்தி, உரிய பரப்பு ஆகிய இரண்டின் பெருக்கல் பலன்.
86. மின்பாய அடர்த்தி என்றால் என்ன?
ஓரலகு பரப்பிலுள்ள மின்னேற்றம்.
87. மின்காந்தக் கொள்கை யாது?
மின்காந்த அலைகளாக ஒளி செல்கிறது என்னுங் கொள்கை.
88. இதை வகுத்தவர் யார்?
இக்கொள்கையை மாக்ஸ்வெல் என்பார் 1873இல் வகுத்தார்.
89. மின்காந்த அலை என்றால் என்ன?
ஒரு மின்னேற்றத்திலிருந்து வெளிச்சென்று பரவும் அலைக்கழிவு. இது வானொலி அலையே.
90. வரிச்சுற்று என்றால் என்ன?
ஒரு தேனிரும்பில் அடுத்தடுத்து மின்கம்பி கொண்டு சுற்றப்படும் சுற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 9 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அடர்த்தி, மின்னேற்றம், கூலும், அலகு