இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 8
71. இதன் குறைகள் யாவை?
1. தீ விபத்து உண்டாதல்.
2. வீணாக மின்சாரம் செலவழிதல்.
72. இக்குறைகளை எவ்வாறு போக்கலாம்?
1. உருகிகளைப் பயன்படுத்தல்.
2. மின்கம்பிகளைக் காப்பிடுதல்.
73. கட்டம் என்றால் என்ன?
ஒரு மின்சுற்றிலுள்ள நிலை.
74. கட்டப்படம் என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும் வெப்பநிலையிலும்
ஒருபொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் வரைபடம்.
75. கிர்காப்பு விதிகளைக் கூறுக.
1. பல்வேறு கடத்திகளில் இணையும் ஒரு சந்தியில் பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத்தொகை ஒரு சுழி.
2. ஒரு மூடிய வலைச்சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்களின் எண்ணியல் கூட்டுத்தொகை, அம் மின்சுற்றி லுள்ள மின்னியக்கு விசைகளின் எண்ணியல் கூட்டுத் தொகைக்குச் சமம்.
76. புவி இணைப்பு என்றால் என்ன?
மின்கடத்தியை மண்ணிற்குள் செலுத்துதல். வீட்டு மின் இணைப்போடு தொடர்புடையது.
77. மின்னேற்றம் என்றால் என்ன?
அடிப்படைத் துகள்களின் மூலப்பண்பு.
78. மின்னேற்றத்தின் வகைகள் யாவை?
நேர்மின்னேற்றம் (+), எதிர்மின்னேற்றம் (-)
79. மின்னேற்றத்தின் சிறப்புகள் யாவை?
1. ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று விலக்கும்.
2. எதிர்மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று ஈர்க்கும். அலகு கூலும்.
80. மின்னேற்ற அடர்த்தி என்றால் என்ன?
ஒரு பருப்பொருளின் அலகுப் பருமனிலும் அலகுப் பரப்பிலும் உள்ள மின்னேற்றம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 8 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், எண்ணியல், யாவை