இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 10
91. மின்காந்தம் என்றால் என்ன?
தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம்.
92. மின்காந்தம் ஏன் தற்காலிகக் காந்தம் ஆகும்?
மின்சாரம் இருக்கும் வரையில்தான் அதில் காந்தம் இருக்கும்.
93. மின்காந்த நிறமாலையில் உள்ள அலைகள் யாவை?
வானொலி அலைகள்.
94. மின்காந்தம் பயன்படும் கருவிகள் யாவை?
மின்மணி, மின் பளுத்துக்கி.
95. மின்காந்தச் சூழல் என்றால் என்ன?
குறிப்பிட்ட பரப்பு அல்லது வெளியில் தோன்றும் வானொலி அதிர்வெண் புலங்கள்.
96. மின்காந்தத் தூண்டல் என்றால் என்ன?
காந்த விசைகளைக் கடத்தி ஒன்று வெட்டுகின்ற பொழுது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகிறது.
97. இதைக் கண்டறிந்தவர் யார்?
மைக்கல் பாரடே, 1831.
98. மின்காந்தத் தூண்டல் பயன்படுங் கருவிகள் யாவை?
தூண்டுசுருள், மின்னியக்கி, மின்னியற்றி.
99. தூண்டுசுருள் என்றால் என்ன?
மின்தூண்டல் அடிப்படையில் வேலை செய்யுங் கருவி. குறைந்த மின்னழுத்தமுள்ள நேர்மின்னோட்டத்திலிருந்து அதிக மின்னழுத்தத்தை உண்டாக்குவது.
100. இதன் பயன்கள் யாவை?
1. மின்னேற்றக் குழாய்களில் வளிநிறமாலைகளை உண்டாக்குவது.
2.அரிய வளிகளின் வழியாக மின்னேற்றத்தை ஆராய்வது.
3. எக்ஸ் கதிர்களை உண்டாக்குவது.
4. அகக்கனற்சி எந்திரத்தில் மின்பொறியை உண்டாக்கப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 10 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, மின்காந்தம், என்ன, என்றால், உண்டாக்குவது