இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 21
201. முனைப்படுதல் (துருவகரணம்) என்றால் என்ன?
இது ஒல்ட்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. துத்தநாகத்திலிருந்து வெளியாகும் அய்டிரஜன் குமிழிகள் செப்புத் தகட்டில் குவியும். இதனால் கம்பி
வழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படும். இதைப் போக்க ஆக்சிஜனை அளக்கக் கூடிய முனைச் செயல் நீக்கியைப் (மாங்கனீஸ் இரு ஆக்சைடு) பயன்படுத்த வேண்டும்.
202. உள்ளிட நிகழ்ச்சி என்றால் என்ன?
இது ஒல்ட்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் தூய்மையற்ற துத்தநாகத்திலிருந்து வெளியாகும் கரித்துணுக்களுக்கும் துத்தநாகத்திற்குமிடையே சிறு மின்னோட்டங்கள் நிகழும். இதனால் கம்பி வழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படும்.இதைப் போக்கத் துத்தநாகத்தகட்டை இரசக்கலவை செய்ய வேண்டும்.
203. மின்முலாம் பூசுதல் என்றால் என்ன?
மின்னாற் பகுப்பு அடிப்படையில் ஒர் உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மீது படியச் செய்தல். செப்பு வளையலுக்குத் தங்க முலாம் பூசுதல்.
204. மின்னச்சு என்றால் என்ன?
மின்னாற் பகுப்பு மூலம் மூல எழுத்தின் படி எடுத்தல்.
205. படி எடுத்தல் என்றால் என்ன?
மின்னாற்பகுப்பு முறையில் செய்யப்பட்ட மூலத்தின் பதிவைப் பயன்படுத்துவதற்கு தயார் செய்தல்.
206. எரிபொருள் மின்கலம் என்றால் என்ன?
வேதி வினைமூலம் வேலை செய்து மின்சாரத்தை உண்டாக்குவது. இதன் பயனுறுதிறன் 45 -60% எ-டு. அய்டிரஜன் எரிபொருள் மின்கலங்கள்.
207. இலித்திய - அயனி மின்கல அடுக்கு என்றால் என்ன?
துணை மின்கல அடுக்கு எதிர்முனை (-) இலித்திய ஆக்சைடு நேர்முனை (+). மின்பகுளி நீர்ம ஊடகம். இதை ஜப்பான் உருவாக்கி உள்ளது. (1994)
208. துகள் பொழிவு என்றால் என்ன?
அதிக அளவு அயனிகள் உண்டாதல். உண்டாக்கப்பட்ட மின்னணுக்களும் அயனிகளும் அதிக அணுக்களை அயனிவயமாக்குதல்.
209. மூளை மின் வரையம் (EEG) என்றால் என்ன?
பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக் கப்படும் மின்னழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்களைப் பதிசெய்தல்.
210. இதய மின்வரையம் என்றால் என்ன?
இதயத் தசைகள் சுருங்கும்பொழுது மின் வேறுபாடு களின் ஒளிப்படப் பதிவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 21 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஏற்படும்