இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 11

101. லென்ஸ் விதியைக் கூறுக.
தூண்டிய மின்னோட்டம் எப்பொழுதும் அதை உண்டாக்கும் மாற்றத்தை எதிர்க்கும் திசையில் அமையுமாறு ஒடும். 1835இல் இவ்விதியை முதன்முதலில் இவர் வகுத்தார். இது ஒருவகை ஆற்றல் மாற்ற விதியே.
102. மின்நிலைமம் என்றால் என்ன?
ஒரு சுற்றிலுள்ள முழுத் தூண்டலுக்கும் அதை உண்டாக்கும் மின்னோட்டத்திற்கும் உள்ள வீதம். ஒரு மின்சுற்றின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தில் உண்டாகும் மாற்றத்தை எதிர்க்கவல்ல திறன்.
103. வரம்பு மின்னழுத்தம் என்றால் என்ன?
பெரும மின்னழுத்தம். மின்னேற்பி சேதமுறாமல் தாங்கக் கூடியது.
104. மின்னழுத்தம் என்றால் என்ன?
ஒல்ட் என்னும் அலகினால் குறிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு அல்லது மின்னியக்கு விசை.
105. மின்னழுத்தமானி என்றால் என்ன?
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவுங் கருவி.
106. உயர்மின்னழுத்தம் என்றால் என்ன?
உயர் மின்னழுத்த வேறுபாடு. பலநூறு ஒல்ட்டுகளுக்கு மேல். இம்மின்னழுத்தமுள்ள மின்சாரம் செல்லத் தடித்த கம்பிகள் உண்டு.
107. மின்கடத்தும் பொருள்கள் யாவை?
செம்பு, அலுமினியம் முதலியவை மின்சாரத்தைக் கடத்தும்.
108. மின் கடத்தாப் பொருள் யாது?
ஒரு மின்தேக்கியில் கடத்துப் பரப்பைப் பிரிப்பது மின்கடத்தாப் பொருள் - காற்று.
109. மின்திருத்தல் என்றால் என்ன?
இது இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றுவது.
110. மின்திருத்தி என்றால் என்ன?
ஒரு திசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செலுத்துங் கருவி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 11 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, மின்னழுத்த, மின்னழுத்தம்