இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 7
61. டிபை கக்கல் கொள்கை யாது?
மின்பகுளிகளின் குறிக்கோளற்ற நடத்தையை விளக்குங் கொள்கை.
62. இக்கொள்கையை யார் எப்பொழுது வெளியிட்டனர்?
டிபை, கக்கல் ஆகிய இருவரும் 1923இல் வெளியிட்டனர்.
63. முனை என்றால் என்ன?
மின்சுற்றுப்புள்ளி. இத்துடன் கடத்தி ஒன்றை (கம்பி) இணைக்கலாம்.
64. முனையம் என்றால் என்ன?
பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம்.
65. இருமுனைவாய் என்றால் என்ன?
இது எதிர்மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவது.
66. இதை அமைத்தவர் யார்?
பிளிமிங்.
67. மின்சுற்று என்றால் என்ன?
ஒரு மின்கலத்தின் மின்னோட்ட வழி.
68. இதன் வகைகள் யாவை?
மூடிய சுற்று - விளக்கு எரிதல்.
திறந்த சுற்று - விளக்கு எரியாமல் இருத்தல்.
69. மின்சுற்றை மூடித்திறப்பதற்குரிய அமைப்புகள் யாவை?
தொடுசாவிகள், குமிழிகள், பொத்தான்கள், சொடுக்கிகள்.
70. கிட்டச்சுற்று என்றால் என்ன?
இதில் காப்பிடப்பட்ட கம்பிகள் உறை நீங்கிய இடத்தில் சேருவதால் உண்டாகும் மின்னோட்ட வழி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 7 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்