இயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 1

1. மின்னியல் என்றால் என்ன?
மின்சாரத்தையும் மின்பண்புகளையும் ஆராயுந்துறை.
2. மின்ஒலி இயல் என்றால் என்ன?
மின் ஒலிபற்றி ஆராயுந்துறை. இதில் மின்னாற்றல் ஒலியாற்றலாகிறது.
3. மின்னியக்கவியல் என்றால் என்ன?
மின் வினைகளுக்கும் காந்த விசைகளுக்குமிடையே உள்ள தொடர்பினையும் அவற்றின் எந்திரக் காரணிகளையும் வினைகளையும் ஆராயுந்துறை.
4. மின்பகிர்வு இயக்கவியல் என்றால் என்ன?
மின்னோட்டப் பகிர்வு பற்றி ஆராயுந்துறை.
5. மின்காந்தவியல் என்றால் என்ன?
காந்தத்திற்கும் மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுந்துறை.
6. மின்கலம் என்றால் என்ன?
மின்னாற்றலை வேதியாற்றலாகச் சேமித்து வைத்திருக்கும் கலம். இதை ஒல்டா என்பவர் 1799 இல்
முதன்முதலாக அமைத்தார்.
7. மின்கலங்களின் வகைகள் யாவை?
1. முதன்மை மின்கலங்கள் - பசை மின்கலம்.
2. துணைமின்கலம் - சேமக்கலம்.
8. மின்கல அடுக்கு என்றால் என்ன?
மின்கலத் தொகுதி.
9. மின்கல அடுக்குத்திறன் என்றால் என்ன?
இதன் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் ஆகும். இது ஆம்பியரில் கூறப்படும்.
10. சேமக்கல அடுக்கு என்றால் என்ன?
இது துணை மின்கலமே. மின்னாற்றலை வேதியாற்ற லாகச் சேமித்துவைப்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மின்னியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை