கணிதம் :: எண் கணிதம்
71. திசை எண்கள் என்றால் என்ன?
l, m , n. என்பவை குறியீடுகள். l:m:n என்னும் வீதத்திலுள்ள மூன்று எண்களும் திசை எண்கள் ஆகும்.
72. எண்கணிதத் தொடரகம் என்றால் என்ன?
எல்லா மெய்யெண்களின் கூடுதல்.
73. இடைவெளி என்றால் என்ன?
ஒர் ஆயத்தொகுதியில் உள்ள எண்களின் தொகுதி. இரு முடிவுப்புள்ளிகளுக்கிடையே இவை சமமதிப்புகளாகக் கொள்ளப்படும். இது திறந்த இடைவெளி, மூடிய இடைவெளி என இருவகைப்படும்.
74. தொடர்பெருக்கம் என்றால் என்ன?
ஒரு எண்ணுக்குச் சமமாக அல்லது குறைவாக இருக்கும் எல்லா முழு எண்களின் பெருக்கற் பலன். தொடர் பெருக்கம் 7 என்பது 7! என்று எழுதப்படும் பொழுது, அது 7x6x5x4x3x2x1 என்பதற்குச் சமம். தொடர் பெருக்கச் சுழி 1 ஆகும்.
75. மூலங்காணல் என்றால் என்ன?
ஒர் எண்ணின் மூலத்தைக் காணும் முறை.
76. பர்னவுலி எண்கள் என்றால் என்ன?
B1, B2, B3, ஆகியவை. விரிவு பின்வருமாறு.
x 1-e-x = 1 + 1 2 x + B1 2! x2 - B2 4! x4 + B3 6! x6 - ....
முதல் சில மதிப்புகள் :
B1 = 1/6, B2 = 1/зо, B3= 1/42, B4= 1/30, B6 = 5/66.
இவற்றிற்குப் பின் அவை முடிவிலி.
77. மொத்தம் என்றால் என்ன?
1. கொள்கலம் உட்படச் சரக்குகளின் எடை
2. செலவினங்களை நீக்குவதற்கு முன்னுள்ள ஆதாயம்.
78. பகுதிக் கூட்டுத் தொகை என்றால் என்ன?
ஒரு முடிவுறாத் தொடரின் தொடக்கத்திலிருந்து அமையும் முடிவுறு எண் உறுப்புகளின் கூட்டுத் தொகை. குவி வரிசையில் முதல் r உறுப்புகளின் பகுதிக் கூட்டுத் தொகையான Sr என்பது முடிவிலியின் கூட்டுத் தொகைக்குத் தோராயமாகும்.
79. விளைவு என்றால் என்ன?
பங்குகளிலிருந்து கிடைக்கும் வருமானம் நூற்ற விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது.
80. ஒர் உறுப்புச் செயல் என்றால் என்ன?
இது ஒரு கணித நடவடிக்கை. ஓர் எண்ணை மற்றொரு எண்ணாக மாற்றுவது. எ-டு. ஒர் எண்ணின் வர்க்கமூலம் காணல் ஒர் உறுப்புச் செயல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கூட்டுத், இடைவெளி, எண்கள்