கணிதம் :: எண் கணிதம்

(1) அடிப்படைச் செயல்கள்
1. கணிதத்திலுள்ள நான்கு அடிப்படைச் செயல்கள் யாவை?
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்.
2. செயலி (operator) என்றால் என்ன?
1. ஒரு கணிதச் சார்பு : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் அல்லது மடக்கைக்கு இருபடி மூலம் எடுத்தல்.
2. கணிதச் செயல் அல்லது சார்பைக் குறிக்கும் குறியீடு.
எ-டு. +, -, x, √ , log10.
3. மீதி என்றால் என்ன?
ஒர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க மிஞ்சி இருப்பது.
எ-டு. 57/12 = 9 மீதி. ஈவு 4.
4. ஈவு என்றால் என்ன?
ஒர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க வரும் முடிவு. மீதி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
எ-டு. 9/3 = 3.17/3 = ஈவு 5, மீதி 2.
5. சரியிலா ஈவு என்றால் என்ன?
12 க்கு 5 ஈவு ஆகாமை.
6. சரி ஈவு என்றால் என்ன?
3 என்பது 12 க்குச் சரி ஈவு.
7. கூட்டெண் என்றால் என்ன?
ஒரு கூட்டுத்தொகையில் கூட்டப்படும் எண் 4+9 = 13. இதில் 4, 9 கூட்டெண்கள்.
8. கூட்டல் என்றால் என்ன?
குறி +. நான்கு அடிப்படைச் செயல்களில் ஒன்று.
9. கூட்டலின் பண்புகள் யாவை?
1. பரிமாற்று. 2. இயைபு. 3. சமனாக்கல்.
10. கூட்டல் வாய்பாடு என்றால் என்ன?
கோணங்களின் தனிச் சார்புகளைக் கொண்டு இரு கோணங்களின் வேறுபட்டையோ ஒரு கூட்டுத் தொகையின் முக்கோண அளவுச் சார்புகளையோ தெரிவிக்கப் பயன்படும் சமன்பாடுகள் இவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மீதி, கூட்டல், அடிப்படைச்