கணிதம் :: எண் கணிதம்
11. கூட்டல் வாய்பாடுகளிலிருந்து பெறப்படும் வாய்பாடுகள் யாவை?
1. இரட்டைக் கோண வாய்பாடு.
2. அரைக் கோண வாய்பாடு.
3. பெருக்கற் பலன் வாய்பாடு.
12. கழித்தல் என்றால் என்ன?
அடிப்படைச் செயல்கள் நான்கில் ஒன்று. இரு கணியங்களுக்கிடையே (quanities) வேறுபாட்டை ஈருறுப்புச் செயல் மூலம் காணலாம். இதற்குப் பரிமாற்றுப் பண்போ சேர்ப்பிடப் பண்போ இல்லை. எண்களைக் கழித்தலுக்கு சமனி உறுப்பு 0 மட்டும் உண்டு. இந்நிலை அது வலப்பக்கத்தில் இருக்கும் பொழுது (5-0 =5; ஆனால் 0-5≠5).
திசைச்சாரி, அணி முதலிய இனங்களுக்குக் கழித்தல் உண்டு.
13. மேல் கொண்டு செல்லுதல் என்றால் என்ன?
கழித்தலில் எண் மதிப்பைக் கடன் வாங்கல்.
14. பெருக்கெண் என்றால் என்ன?
மற்றொரு எண் அல்லது உறுப்பினால் பெருக்கப்படும் எண். பெருக்குவது பெருக்கி.
15. பெருக்கல் என்றால் என்ன?
குறி X இரண்டுக்கு மேற்பட்ட அளவுகளின் பெருக்கற் பலனைக் காணும் செயல். எ-டு. 4 x 8 = 32.
16. பெருக்கு வரிசை என்றால் என்ன?
ஒவ்வொரு உறுப்பின் வீதமும் அடுத்த உறுப்புக்கு நிலை யாக இருக்கும் வரிசை. எ-டு. 1+2+4+8+16+_
17. பெருக்குத் தொடர்ச்சி என்றால் என்ன?
ஒவ்வொரு உறுப்பின் வீதம் அதற்கடுத்துள்ள உறுப்புக்கு நிலையாக இருக்கும். எ-டு. {1,3,9,27,....}
18. வகுத்தல் என்றால் என்ன?
இரு அளவுகளின் ஈவைக் காண நடைபெறும் ஈரடி மானச் செயல். பெருக்கலுக்கு நேர்மாறானது. எண் கணிதத்தில் இரு எண்களை வகுத்தல் பரிமாற்றுப் பண்புள்ளதோ சேர்ப்புப் பண்புள்ளதோ அன்று. வகுத்தலுக்குரிய சமனி எண் 1 மட்டுமே.
19. இணைவு என்றால் என்ன?
இது தொகுதியாக்கலுக்கு உட்படாத செயலைக் குறிப்பது. பொது எண் கணிதத்தில் கூட்டலும் பெருக்கலும் இணைச் செயல்களே ஆகும்.
20. இணைவிதி என்றால் என்ன?
கூட்டல் இணைவிதியும் பெருக்கல் விதியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இருக்கும், செயல், வாய்பாடு