கணிதம் :: எண் கணிதம்
121. பொதுக்காரணி என்றால் என்ன?
இது ஒரு முழு எண். இரண்டிற்கு மேற்பட்ட எண்களைத் துல்லியமாக வகுப்பது.
எ-டு. 14, 49, 84 ஆகியவற்றின் பொதுக்காரணி 7.
122. மாற்றுக்காரணி என்றால் என்ன?
ஓரலகு தொகுதியிலுள்ள அளவீட்டிற்கும் மற்ற அலகுகளிலுள்ள எண்மதிப்பு இணைமாற்றுக்கும் உள்ள வீதம். எ-டு. அங்குலத்திலிருந்து செமீக்குரிய மாற்றுக் காரணி 2-54. ஏனெனில், 1 அங்குலம் = 2.54 செ.மீ.
123. அடித்தல் என்றால் என்ன?
ஒரு தொகுதியிலும் பகுதியிலும் பொதுக்காரணியை நீக்குதல் அல்லது ஓர் இயற்கணிதக் கோவையின் இரு பக்கங்களிலிருந்து ஒரே அளவை நீக்குதல்.
எ-டு.
(1) xy/yz என்பதை y ஐ நீக்கி xz என்று எழுதலாம்.
(2) x ஐ இருபக்கங்களிலும் கழிக்க zx = 2+x என்னும் சமன்பாடு, z=2 என்றாகும்.
(8) பிற
124. ஈரடிமானம் என்றால் என்ன?
இரண்டின் அடிப்படையில் அமைந்தது. எ-டு. 0, 1. கணிப்பொறியின் அடிப்படை
125. ஈரடிமானக் குறிகை என்றால் என்ன?
0, 1.
126. ஈரடிமானச் செயல் என்றால் என்ன?
ஈருறுப்புச் செயல். இரண்டு எண்களைச் சேர்த்து மூன்றாவது எண்ணைப் பெறும் கணக்கு நடவடிக்கை. எ-டு. எண்கணிதத்தில் இரண்டு எண்களைப் பெருக்கல் ஓர் ஈரடிமானச் செயல்.
127. வரம்பு என்றால் என்ன?
எண் கணிதத்தில் ஒரு மதிப்பு. இதற்கு மேல் அதில் உறுப்புகள் இரா.
128. இதன் வகைகள் யாவை?
1. கீழ்வரம்பு. 2. மேல்வரம்பு. 3. மீச்சிறு மேல்வரம்பு. 4. மீப்பெரு கீழ்வரம்பு. 5. சார்பு வரம்பு.
129. எல்லைக்கட்டுப்பாடு என்றால் என்ன?
வகைக்கெழுச் சமன்பாட்டில், குறிப்பிட்ட நிலையில் மாறிகளின் மதிப்பு. இது ஒரு தலைமாறிலிகளின் தீர்வுகளை உறுதி செய்ய உதவுவது
130. பகுப்பு என்றால் என்ன?
வரம்புக் கருத்தைப் பயன்படுத்தும் கணிதத்துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செயல்