கணிதம் :: எண் கணிதம்
131. டயோபாண்டைன் பகுப்பு என்றால் என்ன?
பகுபடா எண் வடிவத்தில் பொதுக்கோவைகளுக்கான குறிப்பிட்ட வீதமுறு மதிப்புகள் காண்பதை ஆராயும் இயற்கணிதத்துறை.
132. போரியர் பகுப்பு என்றால் என்ன?
ஒரு சிக்கலான அலைவடிவத்தின் ஒரு சீரிசைப் பகுதிகளைக் கணித மூலமாகவோ அலைப்பகுப்புக் கருவி மூலமாகவோ உறுதி செய்யலாம்.
133. போரியர் வரிசை என்றால் என்ன?
சார்பைச் சைன்களாகவும் கோசைன்களாகவும் முடிவிலா வரிசையாகத் தெரிவிக்கும் முறை.
134. அமைப்புப் பகுப்பு (Systems analysis) என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் செயல்களை விரிவாகப் பகுத்துப் பார்த்தல். இதனால் அதன் செயல்திறன் முன்னேறும்; சில சிக்கல்கள் தீர்க்கப்படும். இதற்குக் கணிப்பொறி பெரிதும் உதவுவது. ஒரு தொகுதியின் பகுப்பும் இதில் அடங்கும்.
135. இரு சமவெட்டி என்றால் என்ன?
ஒரு கோடு, தளம், அல்லது கோணத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கும் ஒரு நேர்க்கோடு அல்லது தளம்.
136. தொகுபயன் என்றால் என்ன?
பல திசைச்சாரிகளைப் போல் ஒரே விளைவைக் கொண்ட திசைச்சாரி. ஒரே விளைவைக் கொண்ட ஒரு விசை ஒரு விசைத் தொகுதியின் தொகுபயன் ஆகும். அது சமானிக்குக்குத் திசையிலும் அளவிலும் சமம்.
137. சமநிலையாக்கி என்றால் என்ன?
குறிப்பிட்ட விசைத்தொகுதியைச் சமன்செய்து சம நிலையை உண்டாக்கும் ஒரு தனிவிசை. கொடுக்கப்பட்ட விசைகளின் தொகுபயனுக்கு எதிராகவும் சமமாகவும் இருக்கும்.
138. ஒரே கோட்டிலமையும் புள்ளி என்றால் என்ன?
A,B,C என்னும் மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டிலமையப் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவு செய்யப்படுதல் வேண்டும்.
1. ஏதேனும் இரு வெட்டுத்துண்டுகளின் கூடுதல் மூன்றாவது வெட்டுத்துண்டுக்குச் சமம்.
2. ΔABC இன் பரப்பு = 0.
3. AB இன் சாய்வு = BC இன் சாய்வு
4. AB உம் BC உம் ஒரே சமன்பாட்டை பெற்றிருத்தல்.
5.AB என்னும் கோட்டின்மீது C என்னும் புள்ளி அமைந்துள்ளது.
139. தனிக்குவிவு என்றால் என்ன?
மிகை மற்றும் குறை உறுப்புத் தொடரிலுள்ள உறுப்புகளின் தனிமதிப்புகளின் கூட்டுத்தொகையின் குவிதல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், என்னும், பகுப்பு