கணிதம் :: எண் கணிதம்
61. ஓர் எண்ணின் திட்ட வடிவம் என்றால் என்ன?
10 இன் அடுக்கினால் பெருக்கப்பட்டு 1, 10 ஆகிய இரண்டிற்குமிடையே எழுதப்படும் எண். எ-டு. 0.000326, 42567 என்பவை 3.25 x 10-4, 4.2567 x 105 என்று முறையே எழுதப்படுபவை.
62. வரிசை எண்கள் என்றால் என்ன?
வரிசையைக் குறிக்கும் முழு எண்கள். எ-டு. 1, 2, 3, ..
63. கற்பனை எண் என்றால் என்ன?
இது i என்பதின் மடங்கு அல்லது -1 இன் வர்க்க மூலம். x2+2=0 என்பன போன்ற சமன்பாடுகளைத் தீர்க்கப் பயன்படுவது. இதற்குத் தீர்வுகள் x=+i√2, x=-i√2.
64. சிக்கல் எண் என்றால் என்ன?
மெய்ப்பகுதியும் கற்பனைப் பகுதியும் கொண்ட எண். குறைவு ஒன்றின் வர்க்க மூல மடங்கே கற்பனைப் பகுதி. எ-டு. 5+√-1, 3-5x√-7.
65. எல்லா இயற்கணிதச் சமன்பாடுகளையும் எப்படித் தீர்க்கலாம்?
i=√-1 என்பதைச் சேர்க்கும் அளவுக்கு எண்முறை விரிவு படுத்தப்படுமானால், எல்லா இயற்கணிதச் சமன்பாடுகளையும் தீர்க்கலாம்.
66. சிக்கல் எண்களின் பண்புகள் யாவை?
1.இவற்றின் கூட்டல் ஏனைய விதியை நிறைவு செய்வது.
2.இவற்றின் கூட்டல் சேர்ப்பு விதியை நிறைவு செய்வது.
3. இவற்றில் கழி உறுப்பு உண்டு.
4. இவற்றில் நேர்மாறு உண்டு.
5. இவற்றின் பெருக்கல், மாற்றுவிதியை நிறைவு செய்வது.
6.இவற்றின் பெருக்கல், சேர்ப்பு விதியை நிறைவு செய்வது.
7. இவற்றில் பெருக்கல் சமனி இருத்தல்.
8. இவற்றில் பெருக்கல் நேருமாறு இருத்தல்.
9. பரிமாற்று விதி உண்டு.
67. பரிமாற்றுச் சிக்கல் எண்கள் என்றால் என்ன?
x+iy, x-iy என்னும் வடிவமுள்ள இரு சிக்கல் எண்கள். இவற்றை ஒருசேரப் பெருக்கும் பொழுது, மெய்ப்பெருக்கல் பலனைக் கொள்ளும் : x2+y2, Z=x+iy என்றால், 2 இன் சிக்கல் பரிமாற்று Z=x-iy என்பதாகும்.
68. ஆர்கண்ட் படம் என்றால் என்ன?
சிக்கல் எண்கள் குறிக்கப்படும் படம். கிடைமட்ட அச்சு எண்ணின் உண்மைப் பகுதியையும் குறிப்பது.
69. பத்தடிமான எண்கள் என்றால் என்ன?
வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்முறை பத்தினை அடிப்படையாகக் கொண்டது. எ-டு. 7x103 + 9x102 + 5x10 + 2=7952, இங்கு எண்களை 10 இன் அடுக்குகளாகவே எழுதுகிறோம். ஆகவே, இதற்குப் பத்தடிமான எண் என்று பெயர்.
70. பத்தடிமானம் அல்லா எண்கள் யாவை?
ஐந்தடிமான எண், இரண்டு அடிமான எண்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், எண்கள், என்ன, சிக்கல், செய்வது, இவற்றில், இவற்றின், பெருக்கல், நிறைவு, விதியை, உண்டு