கணிதம் :: எண் கணிதம்
51. முழு எண்களின் கூட்டல் பண்புகள் யாவை?
1. அடைவுப் பண்பு - இரண்டு முழு எண்களின் கூட்டுப் பலன் ஒரு முழு எண். எ-டு. 4+3 =7.
2. வரிசை மாற்றுப் பண்பு - முழு எண்களின் கூட்டலில் கூட்டப்படும் எண்களின் வரிசை மாற்றிக் கூட்டப்படும் பொழுது, கூட்டுப் பலன் மாறாதது. எ-டு. 4+5=9; 5+4=9.
3.சுழிப் பண்பு-ஒருமுழு எண்ணுடன் 0ஐக் கூட்டினாலும் அல்லது 0 உடன் ஒரு முழு எண்ணைக் கூட்டினாலும் கூட்டுப்பண்பு அதே முழு எண்தான். எ-டு. 7+0=7.
4. சேர்ப்பு பண்பு - இரண்டுக்கும் மேற்பட்ட பல முழு எண்களைக் கூட்டும்பொழுது, கூட்டப்படும் எண்களை எம் முறையில் சேர்த்துக் கூட்டினாலும் கூட்டுப் பலன் மாறுவதில்லை. எ-டு. (6+3)+4 = 13.
52. முழு எண்களின் வகுத்தல் பண்புகள் யாவை?
1. அடைவுப் பண்பு இல்லை. எ-டு. 8÷2 = 4.
2. சுழியால் வகுப்பது என்பது இல்லை.
3. ஒரு முழு எண்னை ஆல் வகுக்க அந்த எண்னே ஈவாக வரும். எ-டு. 9÷1 = 9.
4. வரிசை மாற்றுப் பண்பு இல்லை. எ-டு. 10÷2 = 5, 2÷10 = 2/10.
53. முழு எண்களின் பெருக்கல் பண்புகள் யாவை?
1. அடைவுப் பண்பு உண்டு.9x2=18.
2. வரிசை மாற்றுப் பண்பு உண்டு. எ-டு. 5x6 = 6x5 = 30.
3. 0, 1. இவை இரண்டாலும் ஒர் எண்னைப் பெருக்கப் பலன் 0, 1 என்பதாகும். 15x0= 0, 15x1=15.
4. சேர்ப்புப் பண்பு உண்டு. எ-டு. 2x (3x10) = 2x30 = 60, (2x3)x10= 6x10=60.
5. பரவல் பண்பு உண்டு. எ-டு. 2x1+2x2=2+4=6.
54. முழு எண்களின் கழித்தல் பண்புகள் யாவை?
1.முழு எண்களில் கழித்தலுக்கு அடைவுப் பண்பு இல்லை. எ-டு. 7-4 = 3.
2. வரிசைப் பண்பு இல்லை, எ-டு. 7-5, 5-7.
3. சுழிப்பண்பு இல்லை. எ-டு. , 0-6.
4. சோப்புப் பண்பு இல்லை. 10 - (4-3), (0-4) - 3.
55. சிறப்பெண்கள் என்றால் என்ன?
குறிப்பிட்ட அளவு துல்லியத்திற்கு ஒரு நுட்பமான மதிப் பைக் குறிக்கப் பயன்படும் எண்கள். எ-டு. 6084.324 என்பது ஏழு சிறப்பு எண்களுக்குத் துல்லியமாகவுள்ள மதிப்பு. 6080 என்று எழுத, அது மூன்று சிறப்பு எண்களுக்குத் துல்லியமாக அமையும். இறுதியாகவுள்ள சுழிக்கு மதிப்பில்லை. ஏனெனில், எண்ணின் அளவு வரிசையைக் காட்டவே அது பயன்படுவது.
56. நுண்எண் என்றால் என்ன?
குறிப்பிட்ட அளவைக் கொள்ளாத எண். எ-டு. 3. இது மூன்று என்னும் எண்ணின் நுண்மையை மட்டுமே குறிப்பது.
57. பிபோனாசி எண்கள் என்றால் என்ன?
முடிவிலாத் தொடர் வரிசை, இதில் அடுத்தடுத்த எண்கள். முன்னுள்ள இரு எண்களைச் சேர்த்து உண்டாக்கப்படு கின்றன. 1, 1, 2, 3, 5, 8, 13, 21. இவர் இத்தாலிய கணித மேதை. முயல்களின் இனப் பெருக்கத்தை விளக்கும் முயற்சியில் இந்த எண்களை அவர் கண்டார்.
58. குறிப்பெண் என்றால் என்ன?
ஒரு கணிதக் கோவையில் ஒரு சார்பு அல்லது முழு எண்ணைக் காட்டும் எண். எ-டு. : y4 இல் அடுக்கு 4 என்பது குறிப்பெண்.
59. அறு தசம எண் என்றால் என்ன?
எண் 16 இல் அமைந்தது (10+6). இது வேறுபட்ட 16 இலக்கங்களானது. தசமத்தில் பத்து எண்களே உண்டு. இயல்பாக இவை 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E. எ-டு. 16 என்பது 10 என்று எழுதப்படும். 21 என்பது 15 (16+5) என்று எழுதப்படும்.
60. இவை சில சமயங்களில் கணிப்பொறியில் பயன்படுபவை. ஏன்?
இவை நீளமான ஈரடிமான எண்களைவிடக் குறுகியவை. ஈரடிமான எண்களை நான்கு நான்காக்கி எளிதான ஆறு தசம எண்களாக மாற்றலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பண்பு, முழு, இல்லை, எண்களின், என்றால், உண்டு, வரிசை, என்ன, என்பது, பண்புகள், யாவை, அடைவுப், பலன், எண்கள், மாற்றுப், கூட்டுப், கூட்டப்படும், கூட்டினாலும், எண்களை