கணிதம் :: எண் கணிதம்
91. தள்ளுபடி என்றால் என்ன?
1. பெயரளவு மதிப்பை விட வெளியீட்டு விலை குறைவாக இருக்கும் பொழுது, ஒரு பங்கின் வெளியீட்டு விலைக்கும் அதன் பெயரளவு மதிப்பிற்குமுள்ள வேறுபாடு.
2. பணம் கொடுத்து வாங்கும்பொழுது ஒரு பொருளின் விலையில் ஏற்படும் குறைப்பு.
92. இதன் இரு வகைகள் யாவை?
1. பணத் தள்ளுபடி 2. மொத்தத் தள்ளுபடி
(4) விதம்
93. வீதம் என்றால் என்ன?
தகவு. ஒர் எண் அல்லது மற்றொன்றால் வகுக்கப்படுதல x, y என்னும் மாறும் இரு அளவுகளின் வீதம். y என்பது x க்கு வீதப் பொருத்தத்தில் இருக்குமானால், xy or x:y என்று எழுதப்பவது, மாறாமல் இருக்கும்.
94. சதவீதம் என்றால் என்ன?
நூற்று விழுக்காடு. ஒரு நூற்றின் பின்னமாகத் தெரிவிக்கப்படும் எண். எ-டு. 5% = 5/100. எப்பின்னமும் அல்லது தசமும் விழுக்காடாகத் தெரிவிக்கப்படலாம். இதற்கு அதை 100 ஆல் வகுக்க வேண்டும்.
எ-டு. 0.63x100 = 63%; 1/4 x 100 = 25%
95. சதவீதப் பிழை என்றால் என்ன?
விழுக்காட்டுப் பிழை. ஒர் அளவீட்டில் தெரிவிக்கப்படும் பிழை. அவ்வாறு தெரிவிப்பது மொத்த அளவீட்டின் விழுக்காடாக அமையும். எ-டு. 20 மீ நீளத்தை அளப்பதில், நாடா 4 செ.மீ.க்குத் திருத்தமாக அளக்கக் கூடுமாதலால், அவ்வளவீடு 2±0.04 மீட்டர்கள். விழுக்காட்டுப் பிழை 0.04/20x100=0.2%
96. நூற்றுமானம் என்றால் என்ன?
எண் வரிசையில் அமைக்கப்பட்ட தகவல் தொகுதியை 100 பகுதிகளாகப் பிரிக்கும் புள்ளித் தொகுதியில் ஒன்று. Pr என்னும் r ஆவது நூற்றமானம் கீழ் மதிப்பாகும்.அதற்குக் கீழ்த்தகவலின் r% அமையும். அதற்குமேல் (100-r)% அமையும். இப்பொழுது Pr ஐ குவிவு நிகழ்வெண் வரைபடத்தினால் காண இயலும்.
(5) சராசரி
97. சராசரி என்றால் என்ன?
ஒரு தொகுதி எண்களின் எதிர்பார்ப்பு மதிப்பு. எ-டு. 4, 6, 8, 10 ஆகியவற்றின் சராசரி.
4 6 8 10 4 = 28 4 = 7
98. சராசரியின் வகைகள் யாவை?
1. நிறையிட்ட சராசரி.
2. சீரிசைச் சராசரி.
3. பெருக்குச் சராசரி.
99. சராசரி விலக்கம் என்றால் என்ன?
எண் தொகுதியின் சிதறல் அளவு.
100. நிறையிட்ட சராசரி என்றால் என்ன?
தேவைக்கேற்பவும் பாடங்களின் முக்கியத்துவத்திற் கேற்பவும் எழுத்து, நேர்முகத் தேர்வுக்கென்றும் தனித் தனிப் புள்ளிகள் அல்லது நிறைகள் தரப்பட்டுத் தயாரிக்கப்படுவது.
ஓர் அறிவியல் போட்டியில் மலர்விழியின் மதிப்பெண் கள் ஆங்கிலம், தமிழ், கணக்கு, அறிவியல் ஆகிய தேர்வுகளில் முறையே 65, 80, 85, 75. பாடங்களுக்குரிய புள்ளிகள் 1, 1, 2, 3. ஆனால், கூட்டுச் சராசரியைப் பின்வருமாறு காணலாம்.
நிறையிட்ட கூட்டுச் சராசரி = 65x1+80x1+85x2+75x3 1+1+2+3 = 77.1
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சராசரி, என்ன, என்றால், பிழை, நிறையிட்ட, அல்லது, தள்ளுபடி, அமையும்