கணிதம் :: எண் கணிதம்
81. செயல். தனி மதிப்பு என்றால் என்ன?
ஒரு சிக்கல் எண்ணின் அல்லது மெய் எண்ணின் மட்டு. எ-டு. -2.3 என்பதின் முழு மதிப்பு. | -2.3 | என்பது 2.3 ஆகும்.
82. சுழி என்றால் என்ன?
0 மற்றொரு எண்ணோடு சேர்க்கப்படும் பொழுது, அந்த எண்ணுக்குச் சமமான கூட்டுத் தொகையைக் கொடுக்கும் எண் 10+0 = 10. முழுக்கள் கணத்தில் சேர்க்கப்படுவது. சுழி மற்றும் எந்த எண்ணில் பெருக்கற் பலன் 0. கூட்டலுக்குரிய சமனி உறுப்பு சுழியாகும்.
83. பொதுப்பகுதி என்றால் என்ன?
பொதுப்பகுவெண். இது ஒரு முழு எண். இரண்டுக்கு மேற்பட்ட பின்னங்களின் பகுதிகளின் பொது மடங்கு. எ-டு. 1/2, 1/3 ஆகிய இரண்டின் பகுதிகள் 6, 12.
84. மீச்சிறு பொதுப் பகுதி என்றால் என்ன?
இரண்டுக்கு மேற்பட்ட பின்னங்களின் பகுதிகளின் பொது மடங்கு, எ-டு. 1/2, 1/3, 1/4 ஆகியவற்றின் மீபொம 12. கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும் பொழுது பின்னங்கள் மீபொப தொடர்பாக வைக்கப்படுகின்றன. 1/2+1/3+1/4 = 6/12+4/12+3/12 = 13/12.
(3) வட்டி
85. வட்டி என்றால் என்ன?
வாங்கிய முதலுக்குக் குறிப்பிட்ட வீதத்தில் கணக் கிடப்படும் தொகை 12%, 18%, 24% வட்டி என வேறு படுவது.
86. வட்டியின் வகைகள் யாவை?
தனிவட்டி, கூட்டுவட்டி
87. தனிவட்டி என்றால் என்ன?
முதல் அல்லது அசலுக்குரிய 12%, 18%, 24% வட்டி.
I = PRT 100
88. வங்கியில் கணக்கிடப்படும் வட்டிகள் யாவை?
1. தனி வட்டி, 2. கூட்டு வட்டி, 3. தவறுதல் வட்டி
89. முதல் என்றால் என்ன?
மூலதனம்.
1. ஒருவரின் எல்லா வகைச் சொத்துகளின் கூடுதல்.
2. கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் பணம். வட்டி தருவது.
3. ஒரு நிறுவனம் தொடங்கப்படும் பொழுது பங்கு தாரர்கள் அளிக்கும் மொத்தப் பணம்.
90. கூட்டு வட்டி என்றால் என்ன?
தொடர் வட்டி அசலுக்கு ஒவ்வோராண்டும் பெறும் வட்டி முதலோடு சேர்க்கப்பட்டு வட்டி கணக்கிடப் படுதல். ஒராண்டு வட்டி அடுத்த ஆண்டு முதலோடு சேர்வதால் கூடுதல் வட்டி கிடைக்கும். P(1+R/100)n இவ்வாய்பாடு பெருக்குத் தொடர்ச்சியாகும். (n=0) இருக்கும் பொழுது, இதன் முதல் உறுப்பு P. பொது வீதம் (1+R/100)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண் கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வட்டி, என்றால், என்ன, பொழுது, அல்லது, பொது