வேதியியல் :: உலோகம்

1. தனிம வரிசை அட்டவணை என்றால் என்ன?
தனிம வரிசை விதிப்படி அமைந்த அட்டவணை. பழைய பெயர் ஆவர்த்தன அட்டவணை.
2. இவ்வட்டவணையின் சிறப்பு யாது?
இதில் 9 தொகுதிகள் உள்ளன. இது தனிமப் பண்புகளை நன்கு விளக்குவது. கனிம வேதியியல் ஆராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை, வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும்.
3. தாதுக்கூளம் என்றால் என்ன?
மண், பாறை முதலிய பயனற்ற பொருள்கள் அடங்கிய
4. தாது என்றால் என்ன?
ஒரு வேதித் தனிமத்தின் கனிமமூலம். எ-டு பாக்சைட்அலுமினியத் தாது.
5. மீ அணுவெண் தனிமங்கள் யாவை?
கதிரியக்க வரிசைத் தனிமங்கள். யுரேனியத்தைக் காட்டிலும் உயர்ந்த அணுவ்ெனகளைக் கொண்டவை. எ-டு. நெப்டுனியம், புளுட்டோனியம்.
6. கார உலோகங்கள் என்பவை யாவை?
தனிம வரிசை அட்டவணையிலுள்ள முதல்தொகுதித் தனிமங்கள் - இலித்தியம், சோடியம்.
7. காரமண் என்றால் என்ன?
காரப்புவி உலோக ஆக்சைடு, காரமண் உலோகம்.
8. காரப்புவி உலோகங்கள் என்றால் என்ன?
தனிம வரிசை அட்டவணையில் இரண்டாந் தொகுதித் தனிமங்கள் - கால்சியம், பேரியம்.
9. அருமண்கள் என்றால் என்ன?
அரும்புவித்தனிம ஆக்சைடு, M2O3.
10. அரும்புவித் தனிமங்கள் யாவை?
ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்ட உலோகத் தனிமத் தொகுதிகள். எ-டு லாந்தனைடு தனிமங்கள், ஸ்கேண்டியம், யெட்ரியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தனிமங்கள், என்ன, என்றால், தனிம, வரிசை, அட்டவணை, யாவை