வேதியியல் :: உலோகம்
41. மயில்துத்தம் என்றால் என்ன?
படிகவடிவச் செம்புச் சல்பேட்டு, பூஞ்சைக்கொல்லி, செம்புமுலாம் பூசப்பயன்படுவது.
42. போர்டோ கலவை என்றால் என்ன?
செம்புச் சல்பேட்டும். கால்சியம் ஆக்சைடும் சேர்ந்த கலவை. பூச்சிக்கொல்லி.
43. பேரியம் கார்பனேட்டு என்பது என்ன?
கரையாத வெண்ணிற உப்பு. எலிநஞ்சு.
44. பேரியம் குளோரைடு என்பது என்ன?
வெண்ணிறத் திண்ம எலிநஞ்சு, தோல் தொழிலிலும் பயன்படுவது.
45. பேரியம் உணவு என்றால் என்ன?
வாய்வழியாகப் பேரியம் சல்பேட்டை உட்கொளல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி ஆய்வுக்கு ஏற்றதாகிறது. வேறு பெயர் பேரியக் குடல்கழுவல்.
46. பேரியம் சல்பேட்டு என்றால் என்ன?
வெண்ணிறத் திண்மம். மேற்பரப்புப் பூச்சுகளில் நிறமி விரிவாக்கி. மற்றும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.
47. பொட்டாசியத்தின் பயன்கள் யாவை?
இது ஒரு கார உலோகம். எல்லா உயிர்ப் பொருள்களிலும் உள்ளது. உலோகக் கலவைகள் செய்யவும், ஒளிமின்கலங்கள் செய்யவும் பயன்படுவது. இதன் உப்புகள் உரங்கள்.
48. பொட்டாசியம் புரோமைடின் பயன்கள் யாவை?
வெண்ணிறப் படிகம். வலித்தணிப்பி, புகைப்படக் கலையில் பயன்படுவது.
49. பொட்டாசியம் குளோரேட்டின் பயன்கள் யாவை?
நேர்த்தியான வெண்ணிறக் குச்சிகள். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது.
50. பொட்டாசியம் சயனைடின் சிறப்பென்ன?
வெண்ணிறப் படிகம், கொடிய நஞ்சு, மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளியையும் பிரிக்கவும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, பயன்படுவது, பேரியம், என்றால், பொட்டாசியம், செய்யவும், பயன்கள், யாவை