வேதியியல் :: உலோகம்
61. குறால் உப்பு என்றால் என்ன?
சோடியம் மெட்டா பாஸ்பேட்டின் படிகம். உருகுநிலை 550.
62. பிரிசியோடைமியத்தின் பயன்கள் யாவை?
வெள்ளிநிற உலோகம். கண்ணாடித்தொழில், கரிப்பிறைத் துருவு விளக்குகள், உலோகக் கலவைகள் ஆகியவற்றில் பயன்படுதல்.
63. காரீயத்தின் பயன்கள் யாவை?
இது வெண்ணிற உலோகம். மின்கல அடுக்குகள், கம்பிகள், நிறமிகள் முதலியவை செய்யப் பயன்படுவது. இது பல உப்புகளையுங் கொடுக்கவல்லது.
64. லூயிசைட்டு என்றால் என்ன?
யூஜே. லூயி என்பார் ஆங்கிலக் கனிமவியலார். இவர் பெயரால் அமைந்தது லூயிசைட் ஆகும். மஞ்சள்நிறக் கனசதுரக் கனிமம். கால்சியம் டிட்டோனியம் ஆண்டிமொனேட்டு என்பது வேதிப்பெயர்.
65. லாரென்சியம் என்றால் என்ன?
e அணுஎண் கொண்ட கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.
66. இது எதிலிருந்து பெறப்படுகிறது?
கலிபோர்னியத்தைச் சிதைத்துப் பெறப்படுவது.
67. வெண்துத்தம் என்றால் என்ன?
துத்தநாகச் சல்பேட்
68. சீனவெள்ளை என்றால் என்ன? பயன்கள் யாவை?
முத்துவெள்ளை. துத்தநாக ஆக்சைடு. வண்ணக் குழைவிலும் பூசுமருந்திலும் பயன்படுவது.
69. துத்தநாகப் புளோரோ சிலிகேட்டின் பயன்கள் யாவை?
மரப்பாதுகாப்புப் பொருள். பூஞ்சைக்கொல்லி.
70. துத்தநாக ஆக்சைடின் பயன்கள் யாவை?
வெண்ணிற நார்ப்பொருள். மட்பாண்டங்களுக்கு மெருகேற்ற, சீனவெள்ளை துத்தநாகக் களிம்புகளில் புரைஎதிர்ப்பி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, பயன்கள், என்ன, என்றால்