வேதியியல் :: உலோகம்

31. செதில் வடிவப் பொன் என்றால் என்ன?
படிக வெள்ளியச் சல்பைடு. பளபளக்கும் பொன்னிறச் செதில்களைக் கொண்டது.
32. ஸ்ட்ரான்ஷியத்தின் பயன்கள் யாவை?
வெண்ணிற உலோகம். மத்தாப்புத் தொழிலிலும் சர்க்கரையைத் துய்மைப்படுத்தவும் பயன்படுவது.
33. ஆரிகக்குளோரைடு என்றால் என்ன?
பொன் (III) குளோரைடு. மின்முலாம் பூசுவதிலும் ஒளிப்படக் கலையிலும் பயன்படுவது.
34. செதில் படிதல் என்றால் என்ன?
கொதிகலன்களில் நீரிலுள்ள கரைந்த கார்பனேட் கரையாத கார்பனேட்டாக கொதிகலன்களில் அடியில் சேறுபோல் படிதல்.
35. இதன் தீமைகள் யாவை?
1. செதில் ஒர் அரிதில் கடத்தி. ஆகவே, எரிபொருள் செலவு
2. கலன் உருகல்,
3. கலனைச் செதில் அரித்தல்.
36. இவற்றை எவ்வாறு போக்கலாம்?
கடினநீரைத் தகுந்த வழியில் மாற்றுதல்.
37. செரியத்தின் பயன் யாது?
இத்தனிமம் உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுகிறது.
38. தாமிரத்தின் பயன்கள் யாவை?
அதிகம் பயன்படும் உலோகம். உலோகக்கலவைகள் செய்ய, மின்கலன்கள் அணிகலன்கள் செய்ய, வீட்டுப்பாண்டங்கள் செய்ய.
39. உருக்கு என்றால் என்ன?
தாமிரத் தாதுக்களை உருக்கும்பொழுது இடைநிலையில் கிடைக்கும் பொருள். இரும்பு, செம்பு ஆகியவற்றின் சல்பைடுகள் சேர்ந்த கலவை.
40. தாமிரச் சல்பேட்டின் பயன்கள் யாவை?
பொதுப்பெயர் நீலத்துத்தம். சாயத்தொழிலிலும் மின்முலாம் பூசுதலிலும் மருந்துகள் செய்வதிலும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, செதில், என்ன, என்றால், செய்ய, பயன்கள், பயன்படுவது