வேதியியல் :: உலோகம்
251. நியோபியம் என்பது யாது?
சாம்பல் நிற உலோகம். அரிமானத் தடையைத் தடுப்பது.
252. நிக்கல் என்றால் என்ன?
வெள்ளிபோன்ற வெண்ணிறக் காந்த உலோகம். மின்முலாம் பூசுவதிலும் கறுக்கா எஃகு செய்வதிலும் பயன்படுவது.
253. நிக்கல் அசெட்டேட்டின் பயன் யாது?
கரையக் கூடிய பசுமை நிறப்படிகம். நிக்கல் முலாம் பூசுவதில் பயன்படுவது.
254. நிக்கல் கார்பனேட்டு என்றால் என்ன?
பசுமையான படிகம். மின்முலாம் பூசவும் பீங்கான் தொழிலிலும் பயன்படுவது.
255. நிக்கல் சல்பேட்டு என்றால் என்ன?
பசும்படிகம். பீங்கான் தொழிலிலும் மெருகேற்றவும் பயன்படுவது.
256. நிக்கல் முலாம் பூசுதல் என்றால் என்ன?
மின்னாற்பகுப்பு முறையில் ஒர் உலோகத்தின் மீது நிக்கல் உலோகத்தைப் படியச் செய்தல்.
257. நிக்கல் வெள்ளி என்றால் என்ன?
ஜெர்மன் வெள்ளி. வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவை சேர்ந்த கலவை. வெள்ளி முலாம் பூசுதலிலும் குரோமிய முலாம் பூசுதலிலும் பயன்படுவது.
258. தோரியத்தின் சிறப்பென்ன?
மென்மையான கதிரியக்கத் தனிமம். காற்றில் படக் கறுக்கும்.
259. வெள்ளியத்தின் சிறப்பென்ன?
எளிதில் உருகக் கூடியது. புறவேற்றுமை கொண்டது.
260. இதன் இரு புறவேற்றுருக்கள் யாவை?
வெண்ணிய வெள்ளியம், சாம்பல் நிற வெள்ளியம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நிக்கல், பயன்படுவது, என்ன, என்றால், வெள்ளி, முலாம்