வேதியியல் :: உலோகம்
21. பெர்மியம் என்றால் என்ன?
புவியில் இயற்கையாகக் கிடைக்காத கதிரியக்கத் தனிமம். குறுகிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.
22. பெரைட் என்றால் என்ன?
இரும்புக் காந்தமுள்ள வனைபொருள்கள். மின்கடத்திகள் அல்ல. ஆகவே, உயர் அதிர்வெண்ணுள்ள சுற்றுகளின் காப்பு உள்ளகப் பொருளாகப் பயன்படுவது.
23. லேந்தனத்தின் பயன்கள் யாவை?
வெண்ணிறத் தனிமம். எண்ணெய்ப்பிளப்பில் வினையூக்கி. வெப்ப உலோகக் கலவைகளில் பயன்படுவது.
24. ஸ்கேண்டியத்தின் பயன் யாது?
இலேசான எடையுள்ள தனிமம்.மீச்செறிவு ஒளிகளில் பயன்படுவது.
25. செலீனியத்தின் பயன்கள் யாவை?
கண்ணாடித் தொழிலில் நிறம் நீக்கியாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். ஒளிமின் கருவிகளிலும் பயன்படுவது.
26. இந்த உலோகத்தின் நான்கு வேற்றுருக்கள் யாவை?
1. உருவமற்ற செந்நிறத்திரள்.
2. உருவமற்ற கறுப்புநிறக் கண்ணாடி போன்ற திரள்.
3. கிச்சிலி சிவப்பு நிறமுள்ள படிகங்கள்.
4. சாம்பல் நிறப் படிகங்கள்.
27. புரோமைடுதாள் என்றால் என்ன?
ஒளிப்படத்தாள். ஒருபக்கம் வெள்ளிப்புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதியாக இருக்கும். மூலங்களிலிருந்து படி எடுக்கப் பயன்படுகிறது.
28. வெள்ளியின் பயன்கள் யாவை?
பளபளப்பான வெண்ணிற உலோகம், நாணயங்கள், பாண்டங்கள், அணிகலன் முதலியவை செய்யப் பயன்படுவது.
29. வெளிப்புரோமைடின் பயன் யாது?
வெளிறிய மஞ்சள் நிற வீழ்படிவு. ஒளிப்படத்தொழிலில் பயன்படுவது.
30. வெள்ளிநைட்ரேட்டின் பயன்கள் யாவை?
சாய்சதுரப்படிகம். சலவையகத்தில் துணிமணிகளுக்குக் குறியிடவும் மயிர்ச்சாயமாகவும் பயன்படுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பயன்படுவது, யாவை, பயன்கள், தனிமம், என்ன, என்றால்