வேதியியல் :: உலோகம்
11. நாணய உலோகங்கள் என்பவை யாவை?
செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை.
12. பெரும்பேற்று உலோகங்கள் யாவை?
பொன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை.
13. இவற்றின் பண்புகள் யாவை?
1. அரிமானத்திற்கு உட்படா.
2. காற்றில் பளபளப்பு குறையாது.
3. நீரிலும் காடிகளிலும் கரையாது.
14. அடி உலோகங்கள் யாவை?
மட்ட உலோகங்கள். இரும்பு, காரீயம் முதலியவை.
15. உலோக அரிமானம் என்றால் என்ன?
உலோகம் அல்லது உலோகக்கலவை சுற்றுப்புறத்துடன் வேதிவினை புரிந்து அழிதல். உலோக மேற்பரப்பில் நிகழ்வது.
16. இதைத் துண்டுங் காரணிகள் யாவை?
1. வெப்பநிலை 2. புறப்பரப்பின் தன்மை. 3. காற்றோட்ட வேறுபாடு. 4. நீர் மற்றும் அமிலம். 5. இரும்பில் துத்தநாகமும் செம்பும் இருத்தல்.
17. இதன் வகைகள் யாவை?
1. வேதிவினை அரிமானம், 2. மின்வேதி வினை அரிமானம்.
18. இதன் விளைவுகள் யாவை?
1. உலோகம் எடை குறைதல்.
2. வலிமையும் பளபளப்பும் நீங்கல்.
3. கட்டுமானப் பணிக்குப் பயன்படாமை.
4. பலகோடி பொருள் இழப்பு.
19. இதை எவ்வாறு கட்டப்படுத்துவது?
1. தார் பூசுதல்.
2. மின்னாற்படியன்வத்தல்.
3. நாகமுலாம் பூசுதல்.
4. வண்ணம் பூசுதல்.
20. மாற்றுத் தனிமமாக்கல் என்றால் என்ன?
அணுக்கருக்களைத் துகள்களில் தகர்ப்பதாலோ கதிரியக்கச் சிதைவினாலோ ஒரு தனிமத்தை மற்றொரு தனிமமாக மாற்றுதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, உலோகங்கள், பூசுதல், அரிமானம்