வேதியியல் :: உலோகம்
261. இதன் பயன்கள் யாவை?
வீட்டுப் பாண்டங்கள் செய்யவும் தகடுகள் செய்யவும் பயன்படுதல்.
262. யுரேனியத்தைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
1789இல் கிளாப்ராத்து என்பார் கண்டறிந்தார்.
263. இதன் கதிரியக்கம் பண்பைக் கண்டறிந்தவர் யார்?
முதன்முதலில் பெக்கரல் 1895இல் கண்டறிந்தார்.
264. இதன் சிறப்பென்ன?
கதிரியக்கத்தனிமம் யுரேனிய ஆக்சைடாகக் கிடைக்கிறது. அனுப்பிளவில் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்துவது. குறைந்த அளவே உலகில் உள்ளது.
265. பிளாட்டினத்தின் சிறப்பென்ன?
மாறுநிலை அரச உலோகம். விலை மதிப்புள்ளது. ஆஸ்வால்டு முறையில் வினையூக்கி. விலையுயர்ந்த அணிகலன்களில் உலோகக் கலவையாகப் பயன்படுவது.
266. பிளாட்டினக் கறுப்பு என்றால் என்ன?
பிளாட்டினம் கருந்தூள்ளாக்கப்பட்ட நிலை. உறிஞ்சிகளாகவும் வினையூக்கியாகவும் பயன்படுவது.
267. இளக்கி என்றால் என்ன?
1. பற்ற வைப்பில் உலோகப்பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள்.
2. உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கப் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி.
268. நிறம்நிறுத்தி என்றால் என்ன?
சாயந் தோய்க்கப் பயன்படும் கனிமப்பொருள். எ-டு. அலுமினியம் அய்டிராக்சைடு.
269. உலர்த்திகள் என்றால் என்ன?
வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர்கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு.
270. தொற்றுநீக்கி என்றால் என்ன?
நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப்பொருள். எ-டு. சலவைத்தூள்.
271. புகையூட்டி என்றால் என்ன?
புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப்பொருள். ஆவியாக்கக் கூடியது. எ-டு. கார்பன் இரு சல்பைடு, எத்திலின். தொற்றுநீக்கி. இம்முறையில் ஆவியைச் செலுத்துவதற்குப் புகையூட்டல் என்று பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பயன்படும், இதன்