வேதியியல் :: உலோகம்
51. பொட்டாசியம் இரு குரோமேட்டின் பயன்கள் யாவை?
கிச்சிலி சிவப்புநிறப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி, சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது.
52. பொட்டாசியம் அய்டிராக்சைடின் பயன் யாது?
எரிபொட்டாஷ். மென்குளியல் சவர்க்காரங்கள் செய்யப் பயன்படுவது.
53. பொட்டாசியம் அயோடைடின் பயன் யாது?
வெண்ணிறப்படிகம். புகைப்படக் கலையில் பயன்படுவது.
54. பொட்டாசியம் பர்மாங்கனேட்டின் பயன்கள் யாவை?
கரிய ஊதா நிற ஊசிவடிவப் படிகம். தொற்றுநீக்கி. ஆக்சிஜன் ஏற்றி. கரிமவேதிஇயலில் பேயர்ஸ் வினையாக்கி.
55. பொட்டாசியம் நைட்ரேட்டின் பயன்கள் யாவை?
வெடியுப்பு. ஊசிபோன்ற படிகம். வெடிகுழல்தூள், நைட்டிரிகக்காடி, வாணவேடிக்கைப் பொருள்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது
56. பொட்டாசியம் சோடியம் நைட்ரேட்டின் பயன் யாது?
வெண்ணிறப் படிகம். ரொட்டித்தூள் செய்யப் பயன்படுவது.
57. பொட்டாசியம் தயோசைனேட்டின் பயன் யாது?
மருந்துகளும் சாயங்களும் செய்யப் பயன்படுவது. நிறமற்ற நீர்கொள் பொருள்.
58. பொட்டாஷ் என்பது எவற்றைக் குறிக்கும்?
பொட்டாசியம் அய்டிராக்சைடு, பொட்டாசியம் கார்பனேட்
59. பொட்டாஷ் படிகாரம் என்பது என்ன?
அலுமினியம் பொட்டாசியம் சல்பேட்
60. பொட்டாஷ் காக்கைப் பொன்னின் பயன்கள் யாவை?
இது வெண்காக்கைப் பொன். மின்பொருள் உற்பத்தியில் பயன்படுவது. தவிர, வண்ணக்குழைவில் நிரப்பியாகப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலோகம் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பொட்டாசியம், பயன்படுவது, யாது, செய்யப், யாவை, பயன், பயன்கள், படிகம், பொட்டாஷ்