முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெந் திறல் தடக்கை
'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக் கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர, வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்: நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, |
5 |
இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின், பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல், கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும், புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த |
10 |
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன் மன்ற, தானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - திறல், வெந், வண்ணம்