முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து » 85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து,
வென்றிச் சிறப்புக் கூறுதல்
பதிற்றுப்பத்து - 85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாடு காண் நெடு வரை
நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ, 'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'- இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என, முன் திணை முதல்வர் போல நின்று, |
5 |
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை, சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை, அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின், |
10 |
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல் இசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாடு, நெடு, காண், வண்ணம்