கலித்தொகை - பாலைக் கலி - 6
மரையா மரல் கவர, மாரி வறப்ப- வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர், சுரை அம்பு, மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம், உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்- தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம் | 5 |
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால், என், நீர் அறியாதீர் போல இவை கூறல்? நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும், அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு துன்பம் துணையாக நாடின், அது அல்லது | 10 |
இன்பமும் உண்டோ , எமக்கு? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நீர்