கடி ஜோக்ஸ் 8 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
-***-
மாலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
கலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
-***-
தாத்தா : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
பேரன் : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
தாத்தா : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.
-***-
பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.
-***-
நோயாளி : அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர் : கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 8 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், டாக்டர், கூப்பிடுவாங்க