கடி ஜோக்ஸ் 9 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !
காதலன் : லட்டு, ஜிலேபி.
-***-
பஸ் கண்டக்டர் : பாட்டி, எங்கே போகணும்?
பாட்டி: எங்க வீட்டுக்கு!
-***-
ஒருவர் : வாங்க, வாங்க!
மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!
ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!
மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
-***-
பசி தீர்க்கும் ஊர்கள் இரண்டு சொல்லுங்கள்?
பூரி, சோத்துப்பாக்கம்!
-***-
சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
தெரியாது!
சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 9 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,