கடி ஜோக்ஸ் 45 - கடி ஜோக்ஸ்
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
-***-
சர்தார் : தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன் : பி.எ.
சர்தார் : அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
-***-
பள்ளியில் வாத்தியும் மாணவியும் பேசிக்கிறாங்க :
வாத்தி : சட்டையில் பட்டன் பிஞ்சிருக்குதே தைக்க வேண்டியதுதானே
மாணவி கவி : சாரிங்க கொஞ்சம் அசட்டையா இருந்திட்டேன்
-***-
நபர் 1 : ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...
நபர் 2 : ஏன் என்ன ஆச்சு?
நபர் 1 : காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார்ந்க. நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...
நபர் 2 : !!!!?????!!!!
-***-
பாபு : என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு : ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு : போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 45 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நபர், என்ன, வேண்டியதுதானே, சர்தார், பாபு, ரேணு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரெண்டு