கடி ஜோக்ஸ் 99 - கடி ஜோக்ஸ்
ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
சோமு : எப்படி?
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு.
-***-
ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு
சோமு : எப்படி?
ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
-***-
ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?
சோமு : லோன் லோன்-னுதான்
-***-
சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,,
ராமு : எப்படி சொல்றே ,,,,, ?
சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே
-***-
ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ?
சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க .. ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 99 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, எப்படி, வியாபாரம், லோன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்