கடி ஜோக்ஸ் 43 - கடி ஜோக்ஸ்
காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
-***-
நண்பன் 1 : டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா....
நண்பன் 2 : அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா....
-***-
இராமு : அந்த டாக்டர் போலி என்று எப்படி கண்டு பிடிச்சீங்க?
நண்பன் : தையல் போடறதுக்கு Tailor கடைக்கு போக சொல்லுறாரு
-***-
பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர் : ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண் : என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர் : அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண் : இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர் : ?????
-***-
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 43 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, கஸ்டமர், கேர், ", பெண், நண்பன், டாக்டர், மேடம், சார், போய், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, காதலன், உங்க, அந்த