கடி ஜோக்ஸ் 47 - கடி ஜோக்ஸ்
சேல்ஸ் மேனேஜர் : உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர் : ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
-***-
நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி : ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
-***-
தபால்காரர் : உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார் : ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
-***-
மகன் : நான் மேலே படிக்கப் போறேன்
அப்பா : May-லேதான் விடுமுறை ஆச்சே
-***-
நபர் 1 : அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2 : அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....
நபர் 1 : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2 : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 47 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நபர், சிகரெட், மகன், நான், உங்களுக்கு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, உங்க