கடி ஜோக்ஸ் 44 - கடி ஜோக்ஸ்
மகன் : அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா : ஓன்னுமில்லைமகன் : பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா : ...............
-***-
ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?
சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
-***-
நோயாளி : டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...
டாக்டர் : அப்படினா பக்கத்துல போயி பாக்க வேண்டியதுதானே.....
-***-
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
-***-
சொங்கி சோமு : ஏண்டா...வீரா....நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, நீ .....யாருக்கு பின்னாடிடா... நின்ன?
வீரபத்ரன் : போடா...லூசு...எனக்கென்ன பைத்தியமா...போர்ன்னு...சொன்னா...பதுங்கு...குழிக்கு ஓடலாம்...யுத்தமில்லே... நடந்துச்சு...நான்...பீரோ பின்னாடி போய் பத்திரமா...ஒளிஞ்சிட்டேன்ல......!!!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 44 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், அப்பா, kadi, ", கல்யாணம், சோமு, சிரிப்புகள், இப்ப, நகைச்சுவை