கடி ஜோக்ஸ் 100 - கடி ஜோக்ஸ்

சோமு : அந்தப் புதுப்படம் ஆறு மணி நேரம் ஒடுதா .. .. ஏன் ?
ராமு : அதுவா .. .. டைரக்டர் ஒவ்வொரு நடிகரா போய் கதை சொன்னது, தயாரிப்பாளரைப் பிடிச்சது, அப்புறம் ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாத்தையும் காட்டறாங்களாம் .. ..
-***-
ராமு : நீ சினிமா டைரக்டராவதற்கு முன்னே, ஊர்லே ரைஸ் மில் வெச்சு இருந்தது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு
சோமு : இப்ப என்ன ஆச்சு .. .. ?
ராமு : எப்பவுமே அரைச்சமாவையே அரைச்சுண்டு இருக்கார்னு விமர்சனம் எழுதறhங்களே
-***-
ராமு : என்னங்க .. .. உங்க படத்துல ஸீனுக்கு ஸீன் அடிதடியா இருக்கே ?
சோமு : பின்னே என்னங்க .. .. பத்தாயிரம் அடில எடுத்த படம்னு நாங்கதான் தெளிவா சொல்லிட்டோமே
-***-
ராமு : யோசனையே இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்துட்டோம்
சோமு : அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?
ராமு : பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..
-***-
சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்
ராமு : எப்படிச் சொல்றே?
சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 100 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ராமு, சோமு, jokes, என்ன, என்னங்க, அப்புறம், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்