கடி ஜோக்ஸ் 46 - கடி ஜோக்ஸ்
அப்பா : ஏண்டா நான் பாங்குக்கு போகசொன்னேன் கைல கிளவ்ஸ் மாட்டிகிட்டு இருக்கியே என்ன விஷயம்
பையன் : நீங்க தானே கரன்ட் அக்கவுண்ட்ல பணம் எடுக்க சொன்னீங்க
-***-
ஆசிரியர் : எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கோரசாக) : புரியலையே சார்...
-***-
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-***-
நண்பர்-1 : என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
நண்பர்-2 : ஏன், என்னாச்சு?
நண்பர்-1 : எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.
-***-
நபர் 1 : நா கோவிலுக்குள்ள போனா மட்டும் அதிகமா ‘பொய்' பேசுவேன்...
நபர் 2 : ஏன் அப்படி..?
நபர் 1 : சன்னிதானத்துல நிக்கும் போது ‘மெய்' மறந்துடுவேன்... அதான் !!! ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 46 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், நபர், எழுதினேன், வைத்து, எந்த, முட்டாள், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நான்