கடி ஜோக்ஸ் 40 - கடி ஜோக்ஸ்
ஒருவர் : கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர் : பிளேடு கம்பெனியிலேங்க.....
-***-
போலீஸ் : பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர் : அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
-***-
நண்பர் : - என்ன டாக்டர்..! ஏன் டல்லா இருக்கீங்க?
டாக்டர் : ஒண்ணுமில்லே. வயதாயிடுத்து, என் ஒடம்ப “செக் அப்” பண்ணணும்..!
நண்பர் : - நீங்களே டாக்டர் தானே..!
டாக்டர் : - தெரியும்..! ஆனால் என்னுடைய பீஸ் அதிகம்...!
-***-
பையன் : அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா : நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன் : ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா : கெட்ட செய்தி
பையன் : வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
-***-
தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 40 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், அம்மா, செய்தி, பையன், நல்ல, கெட்ட, வயசுல, kadi, சிரிப்புகள், எல்லாம், நகைச்சுவை, நண்பர்