கடி ஜோக்ஸ் 38 - கடி ஜோக்ஸ்
தணி : முன்னே உங்க பையன் லா-காலேஜ் போறான்னு சொன்னீங்க, இப்ப மெடிக்கல் போறான்னு சொல்றிங்களே ?
ஓமப்பா : ஆமா முன்னே லா காலேஜ் பெண்கள் பின்னாடி சுத்தினவன் இப்ப மெடீக்கல் காலேஜ் பொண்ணுங்க பின்னாடி சுத்துறான் !
-***-
வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
-***-
ஆசிரியர் : "டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே?"
ராமு : "அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்"
-***-
அப்பா மகி : பட்டு அந்த மரம், செடி ,கொடிகளுக்கு தண்ணி ஊத்துடா செல்லம் ,
ரித்து : நீங்க தானேப்பா சொன்னிங்க மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு , நீங்க தானே மரம் வச்சிங்க அப்ப நீங்க தான் தண்ணி ஊத்தனும்
-***-
காதலி : நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன் : அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 38 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ", காலேஜ், மரம், நீங்க, தண்ணி, என்ன, ராமு, போறான்னு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, முன்னே, இப்ப, பின்னாடி