சிரிக்கலாம் வாங்க 84 - சிரிக்கலாம் வாங்க

என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கும், நா வெளில போறதுக்கும் என்ன சம்பந்தம் டாக்டர்..?
அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு ...
-***-
ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?...
என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.
-***-
“நீங்கதானே தமிழ்செல்வன்..?”
“ஆமாங்க..?”
“உங்க பேர்லே கணக்கு இருக்கா..?”
“கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?”
-***-
அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?...
என்னாச்சு?..
பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்.
-***-
கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?
அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 84 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்னாச்சு, வச்சி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை