சிரிக்கலாம் வாங்க 1 - சிரிக்கலாம் வாங்க
ஒரு வழுக்கைத் தலை ஆள்:
"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வழுக்கி விழுந்துட்டாங்க!"
-***-
"தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி..."
"அதனால...?"
"அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே 'டாண்'னு எழுந்து, அதை ஆ·ப் பண்ணிடுவேன்!"
-***-
நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..
சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை
அவர் ரத்தம் என்ன குரூப்
ஊழல் குரூப்பாம்
-***-
ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.
-***-
வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 1 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, ரத்தம், அவர், உங்க, ரொம்ப, குரூப், என்ன, சிரிப்புகள், நகைச்சுவை, kadi, அலாரம்